Translate Tamil to any languages.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

பணம் பற்றிய பேச்சு!


எவர் வாயாலும்
பணம் பற்றிய பேச்சுத் தான்
கேட்கத் தான் முடிகிறதே!
காதலிப்பாயா என
தோழியிடம் கேட்டாலென்ன
இனிய இரவாகட்டுமென
மனைவியோடு படுக்கையை விரித்தாலென்ன
முதலில பணத்தை வையப்பா என
எட்ட விலகிறாங்களே!
பணம் பத்தும் செய்யுமாம்
குணம் செத்தாலும் நிலைக்குமாம்
ஆனால்,
நம்ம ஊரில நடப்பது என்ன?
பணத்தைப் பொத்திப் பொத்தி
வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் இல்லையே...
பணத்தைக் கிள்ளிக் கிள்ளி
ஊருக்கெல்லாம்
கொடுத்து வைத்திருந்தவர் வீட்டிலே
உறவுகள் நிறைந்து இருக்குமே...
எப்படி இருப்பினும்
எவரும்
தனக்குப் பின்னே ஈகம் (தானம்) என்பதை
மறக்கவில்லைத் தானே!
கறுப்புப் பணம்
சிறை செல்லத் துணைக்கு வரும்
நீலப் பணம்
உயிர்கொல்லி (எயிட்ஸ்) தரத் துணைக்கு வரும்
பொய்ப் (போலிப்) பணம்
உறவுகளற்ற நிலைக்குத் துணைக்கு வரும்
உண்மைப் (மெய்ப்) பணம்
உறவுகள் நிறைந்த நிலைக்குத் துணைக்கு வரும்
என்றெல்லோ நம்ம ஊரில
பணம் பற்றிப் பேசுறாங்களே!


12 கருத்துகள் :

  1. பணம் படுத்தும் பாடு அப்பப்பா..தாங்கள் சொன்னது உண்மை
    தான்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா!

    பணத்தாலே வாழ்க்கை பயனுறவே நல்ல
    குணத்தாற் குறைதன்னைக் கொல்!

    நல்ல சிந்தனை! அருமை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம் என்று TMS இனிய குரல் காதில் விழுகிறது !)

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    அண்ணா.

    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்! பணம் பத்தும் செய்யும்....ம்ம்ம் ஆனால் அந்தப் பணம் அம்மாவை வாங்க முடியுமா?!! குணம்தான் முக்கியம்! நல்ல கருத்துள்ளக் கவிதை!

    பதிலளிநீக்கு
  6. பணம் - குணம் - மாற்றும்
    நன்றாகச் சொன்னீர்கள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!