Translate Tamil to any languages.

புதன், 1 அக்டோபர், 2014

அழைப்பு விடுக்கின்றேன்!


எனக்கும்
என் மனைவிக்கும் இடையே
அடிக்கடி மோதல் மூண்டால்
"மனைவியைத் தெரிவு செய்வதில்
தவறிழைத்தவர்
சாவைத் தெரிவு செய்வதில்
வெற்றி பெறுகிறான்" என்று சொன்ன
பாவரசர் கண்ணதாசன் தான்
என் உள்ளத்தில் நடமாடுவார்!
அட தம்பி, தங்கைகளே...
வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில்
மறந்தும் தவறிழைக்காதீர்...
பின் நாளில் மறக்காமல்
மகிழ்வான வாழ்வை இழக்காமல்
இருக்கத்தானே
படுகிழவன் நான்
விடுக்கின்றேன் அழைப்பு!

13 கருத்துகள் :

  1. நல்ல அறிவுரை
    உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்கமாமல்
    நன்மை தீமை, ஒற்றுமை வேற்றுமை போன்றவற்றை
    அவதானித்து தாங்களே
    வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வது நல்லது

    பதிலளிநீக்கு
  2. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பர்...
    சிலநேரங்களில் மனிதன் கெடுத்தவரம் ஆகி விடுகிறதே,,,,

    பதிலளிநீக்கு
  3. நண்பரே! மிக நல்ல அறிவுரை. ஆனால் நமக்குத் தெரிந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டால்தானே! பல குடும்பங்களில் மறுக்கப்படுகின்றதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அறிஞரே!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... அழுவதும் பெண்ணாலே..நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. கரப்பான் பூச்சிக்கு பயப்பட்ட பெண் என்று கட்டிக் கிட்டால் ,நம்மை பயமுறுத்த ஆரம்பித்து விடுகிறாளே ,ஒரு வேளை தலைஎழுத்து என்பது மாறாது என்பது இதுதானோ ?)

    பதிலளிநீக்கு
  6. தெளிந்து செய்தாலும்
    தெரியும் விதி பின்னர் தான்
    சகோதர சகோதரிகள்
    இறைவன் துணை நாடல் வேண்டும் இனிது.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!