இந்தப் படம் - எனது
சொந்தப் படம் அல்ல
வலைவழியே சுட்டது
ஆக்கியோருக்கு நன்றி!
கட்புலன், செவிப்புலன் ஊடாக
உள்ளத்தை மகிழ்விப்பது
தொலைக்காட்சி என்றாலும்
தொலைக்காட்சித் தொடர்கள்
நல்ல நூல்களைப் படிப்போரையும்
தம்பக்கம் இழுத்துக் கொள்வதால்
நூல்கள் (பொத்தகங்கள்) எல்லாம்
தற்கொலை செய்ய முனைகின்றதே!
தமிழர் பண்பாட்டைச் சீரழிக்கும்
தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை
பார்க்கும் நம்மாளுங்களை
பார்த்தால் துயரம் தான்...
நல்ல நூல்களைப் படித்தால்
நல்ல அறிவினைப் பெருக்கலாம்
என்றறியாமல் இருப்பதால் தான்!
நாளுக்கு நாள்
தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தால்
நாளுக்கு நாள்
பெற்ற/ கற்ற அறிவும் மங்கிப் போகுமே...
உண்மை தான்! - அதனால் பாரும்
தொலைக்காட்சித் தொடர் பார்த்த
பலர் தற்கொலை செய்கிறார்களே!
உள்ளத்தில் தொலைக்காட்சித் தொடர்
ஓடிக்கொண்டிருக்க
தொலைக்காட்சியில் அடுத்துவரும்
நிகழ்வுகளை எண்ணிப்பார்க்க
உள்ளம் முயன்று கொண்டிருக்குமே!
நம்மாளுங்க ஒன்றிப்போன
தொலைக்காட்சித் தொடரில்
நம்மாளுங்க எதிர்பார்ப்பு
எட்டாத வேளை கிட்ட நெருங்குவது
தற்கொலை தான் என்பேன்!
அறிவாளிகளின் அறிவின் இருப்பிடம்
பொத்தகங்கள் (நூல்கள்) தான் - அதனை
வாசிப்பதில் நாட்டம் கொண்டால்
தானும் வாழ்ந்து
மாற்றரையும் வாழவைக்க
அறிவைப் பெருக்கலாமே!
தொடர்ந்து வாசிப்பதால் கண் வலித்தால்
கண்ணிற்குக் குளிர்ச்சியை ஊட்ட
தொலைக்காட்சியைப் பார்த்தாலும்
தொலைக்காட்சித் தொடரில் ஒன்றிப்போவது
உள (மன) நலத்திற்குக் கேடாகுமே!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!