Translate Tamil to any languages.

வியாழன், 6 ஏப்ரல், 2017

வீட்டுக்கு வீடு வாழ்க்கைச் செய்தி


1
ஒருவள்:  இத்தனையும் கற்ற நீ
         ஏன் காதலிக்கக் கற்றிருக்கக் கூடாது?

ஒருவன்:  அத்தனையும் கற்ற நான்
         வருவாய்க் (சீதனம் + ஆதனம்) கணக்கைப் படித்தமையால்
         காதலிக்கப் படிக்க மறந்திட்டேன்!

2
ஒருவன்: இத்தனையும் கற்ற நீ
         ஏன் காதலிக்கக் கற்றிருக்கக் கூடாது?

ஒருவள்: அத்தனையும் கற்ற நான்
         ஆண்களையும் படித்தேனே - அவங்க
         காதலிச்ச பின்னே
         வருவாயும் (சீதனம் + ஆதனம்) கேட்பாங்களே...
         வயிற்றில பிள்ளையையும் தருவாங்களே...

3
இல்லாள் :  மணமுடித்தால் போதாது
           இல்லாளையும் கவனிக்கப் படித்திருக்கணும்

இல்லத்தரசன் :  மணமுடித்தாலும்
               இருட்டினாலும் பரவாயில்லையென
               உழைக்கப் படித்தளவுக்கு
               பிழைக்கப் படிக்கவில்லையே!

இல்லாள் :  இரவுப் படுக்கையிலே
           என்னோட இருந்திருந்தால்
           நான் படிப்பித்திருப்பேனே!


4
இல்லத்தரசன் : மணமுடித்தால் போதாது
               பிள்ளை, குட்டிகளைப் பெறவும் வேணுமே!

இல்லாள் : நான் என்ன பிள்ளை பெற மறுத்தேனா?

இல்லத்தரசன் : நானோ தனிப் படுக்கை
               நீயோ தொலைக்காட்சித் தொடரிலே
               அப்ப, எப்படி பிள்ளையை பெறுவாய்?

5
ஒருவள்: நீயும் ஒரு ஆண்மகனா?

ஒருவன்: ஆமாம்! அதற்கென்ன இப்போ?

ஒருவள்: என்னைக் காதலி என்றால் ஒதுங்கிறியே!

ஒருவன்: எனக்கோ அன்பான இல்லாள் இருக்கிறாளே!

6
ஒருவன்: என்னம்மா? நீயும் பெண் தானே!

ஒருவள்: ஆமாம்! அதற்கென்ன இப்போ?

ஒருவன்: என்னைக் காதலி என்றால் ஒதுங்கிறியே!

ஒருவள்: என்னவன் வரும் நேரமாச்சு - நானும்
         சமைத்துப் போட ஓடுகிறேன்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!