Translate Tamil to any languages.

வெள்ளி, 11 நவம்பர், 2016

தமிழில் ‘நன்றி’ என்பதைப் பிறமொழியில் எப்படிச் சொல்லலாம்.

Posted on மே 13, 2015 by yarlpavanan

தமிழில் ‘நன்றி’ என்பதைப் பிறமொழியில் எப்படிச் சொல்லலாம் என்றறிய உதவிக்குக் கூகிளைப் பாவிக்கலாம்.
இணைப்பு: https://translate.google.com/


இடது பக்கத்தில் தமிழ் மொழியைத் தெரிவு செய்த பின் தமிழ் மொழியில் (லதா எழுத்துரு – unicode பாவித்து) தட்டச்சுச் செய்யுங்கள். வலது பக்கத்தில் விரும்பிய மொழியைத் தெரிவு செய்து வெளியீட்டைப் பெறலாம்.
எடுத்துக் காட்டாக:
இடது பக்கத்தில் நன்றி என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Thanks என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது ස්තූතියි என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது gracias என வெளியாகியது.
அதேவேளை வலது பக்கத்தில் பிரெஞ்சைத் தெரிவு செய்து பார்த்த போது Merci என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் டொச்சைத் தெரிவு செய்து பார்த்த போது dank என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் டணிஸ்ஸைத் தெரிவு செய்து பார்த்த போது tak என வெளியாகியது.
எம்மொழியில் வெளியீட்டைப் பெற்றாலும் அம்மொழியில் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே தெளிவாக மொழி மாற்றிப் பகிர முடியும் என்பதை முதற்பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இதுவரைத் தனிச்சொல்லை மொழி மாற்றிப் பகிர முயற்சி செய்தோம். அடுத்துவரும் பதிவில் இருசொல்களாலான வரிகளை (வசனங்களை) மொழி மாற்றிப் பகிர முயல்வோம்.

வியாழன், 10 நவம்பர், 2016

முற்றுப்புள்ளி (பரிசு பெற்ற கவிதை)

உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
https://plus.google.com/communities/110989462720435185590
என்ற குழுவில் உங்கள் புதிய பதிவுகளை இணைத்து உதவுங்கள்.
அறிவுப்பசி உள்ளவர்கள் தேடிப் படிக்க நீங்கள் உதவியதாக அமையும்.


வாசிப்புப் போட்டி - 2016
https://seebooks4u.blogspot.com/2016/10/2016.html


வரவைத் அழிக்கும் செலவுக்கும் கூட
குடியைக் அழிக்கும் குடிக்கும் கூட
உடலை அழிக்கும் புகைக்கும் கூட
உறவை அழிக்கும் கெட்டதிற்கும் கூட
பண்பாட்டை அழிக்கும் பழக்கத்திற்கும் கூட
ஒழுக்கம் இன்மைக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!

முரண்பாடுகள் முளைக்காமல் இருக்கக் கூட
முறுகல்கள் தோன்றாமல் இருக்கக் கூட
மோதல்கள் தொடராமல் இருக்கக் கூட
முறிவுகள் மலராமல் இருக்கக் கூட
சாவுகள் நிகழாமல் இருக்கக் கூட
அமைதி இன்மைக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!

நட்புகள் நலமாக அமையத் தான்
உறவுகள் அன்பாக இணையத் தான்
காதலும் சுகமாக ஈடேறத் தான்
மணவாழ்வு மகிழ்வோடு தொடரத் தான்
மழலைகள் அறிவோடு வளரத் தான்
புரிதல் இன்மைக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!

தமிழில் ஒன்றைச் சொல்லி முடிக்கையில்
தமிழில் இடுவது முற்றுப் புள்ளியே!
காற்புள்ளி, அரைப்புள்ளி இருந்தாலும் கூட
ஏற்றிடு முற்றுப் புள்ளி இடுவதையே!
தமிழைக் கற்றிடு, தமிழிலேயே பாப்புனைக
பிறமொழிக் கலப்புக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!


தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 அக்டோபர் மாதத்தில் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது. இதனால் எனக்குக் கவியருவி பட்டமும் சான்றிதழும் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.
http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/2016_57.html

அன்புள்ள வலையுறவுகளே! எனக்கு ஏற்கனவே கவிமுரசு (இந்தியாவில்), கலைத்தீபம் (இலங்கையில்) ஆகிய பட்டங்களும் கிடைத்ததை முன்னர் அறியத் தந்தேன்.
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_18.html

செவ்வாய், 8 நவம்பர், 2016

திருமலையில் ரூபன் - யாழ்பாவாணன் சந்திப்பு

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவரும் (ரூபன்) ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றச் செயலாளரும் (யாழ்பாவாணன்) 06/11/2016 ஞாயிறு அன்று முதன் முதலில் நேரில் சந்தித்தனர். ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற எதிர்கால முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினோம். வழமை போன்று ஊற்று புதுப்பொலிவுடன் இயங்கும். மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய ரூபன் தீபாவளித் திருநாளை ஒட்டிய  கவிதைப் போட்டி அறிவிப்பினை விரைவில் வெளியிடவுள்ளார்.

யாழ்பாவாணன், ரூபன் உறவு எப்படி மலர்ந்தது?

ரூபன்-பாண்டியன், ரூபன்-தனபாலன் இணைந்து நாடாத்திய போட்டிகள் போன்று ரூபன்; யாழ்பாவாணனை இணைத்துப் போட்டி நாடாத்தச் சேர்த்தமையால் ரூபன் - யாழ்பாவாணன் உறவு மலர்ந்தது. பின்னர், ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றச் செயலாளராகப் பணியாற்றப் பணித்தார். இத்தனையும் ஒருவரை ஒருவர் நேரில் முகம் பார்த்துப் பழகாது, வலைப் பதிவுகளைப் படித்துப் புரிந்து கொண்டதன் விளைவாக அமைந்தது. இவ்வாறு உலகெங்கும் பல வலை வழி உறவுகள் எனக்குண்டு.

வலை வழியே மலர்ந்த ரூபன் - யாழ்பாவாணன் உறவில், 06/11/2016 ஞாயிறு அன்று திருகோணமலை-ஈச்சிலம்பற்று ரூபன் இல்லத்தில் நேரில் சந்தித்த நிகழ்வு இருவருக்கும் இடையேயான உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல், சமயம் சாராத மக்கள் (சமூக) நலப் பணிகளில் இணைந்து செயற்படுவதாக உறுதி எடுத்துக்கொண்டோம். தாய் நாட்டில் அடிக்கடி இருவரும் நேரில் சந்தித்து ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றப் பணிகளை மேற்கொள்ள ஆண்டவன் உதவுவாரென நம்புகின்றேன்.


திருகோணமலை-ஈச்சிலம்பற்று ரூபன் இல்லத்தில் எனக்கு மதிய உணவு விருந்து பரிமாறினார்கள். படித்து நல்ல பணிகளில் அவரது தம்பிமார் உள்ளனர். அவரது தங்கையும் படித்துக்கொண்டிருக்கிறார். இவர்களது பெற்றோர் அன்பும் பற்றும் நிறைந்த பெரியோர். அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை போல என்னையும் விருப்போடு வரவேற்றனர். இலங்கை அரச மருத்துவமனையில் பணியாற்றும் அவரது இல்லாள், படிப்பில புலியாக விளங்கும் அவரது மகள் எல்லோரும் அன்பாக வரவேற்று இருந்தனர். அவ்வேளை ரூபன் அவர்கள் ஒரு வாழ்த்துச் சான்றிதழையும் வழங்கினார்.


உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண, அதற்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள ரூபன் - யாழ்பாவாணன் உறவு தொடரும். அதேபோல் இருவரது குடும்பத்தாரும் ஒத்துழைப்பார்கள். அதேபோல வலையுலக உறவுகள் எல்லோரும் ஒத்துழைப்பார்கள் என நம்புகின்றேன். போலி உறவுகள் வலை வழியே உலாவுகின்ற வலையுலகில், நம்பிக்கையான உறவுகள் மலரவைத்த ஆண்டவனுக்கும் வலையுலக உறவுகளுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

வெள்ளி, 4 நவம்பர், 2016

வாழ்ந்து தான் பார்க்கலாம் வாங்க



வாழ்க்கையில் இணைந்த இருவரால் - நான்
வாழ்க்கையில் ஒருவராய் மலர்ந்து விட்டேன்.
வாழ்க்கையில் அம்மா, அப்பாவை நானறிந்தேன்
வாழ்க்கையில் எனக்கொருவள் வந்தாள் வாய்த்தாள்
வாழ்க்கையில் குடும்பம் பற்றிப் படிப்பித்தாள்
வாழ்க்கையில் ஒருத்திக்கு ஒருவனாய் இருந்தேன்
வாழ்க்கையில் பணமும் பண்பும் தேவையென்றாள்
வாழ்க்கையில் அன்பாலே ஆளையாள் கட்டுபடுத்தினோம்
வாழ்க்கையில் அன்புபெருக பிள்ளைகள் பிறந்தனர்
வாழ்க்கையில் பிறந்த பிள்ளைகளைப் படிப்பித்தோம்
வாழ்க்கையில் பிள்ளைகளோ நல்லாய் இருக்கிறாங்க
வாழ்க்கையில் பிள்ளைகளால் நற்பெயர் பெற்றோம்
வாழ்க்கையில் அண்டை, அயலுக்கு உதவினோம்
வாழ்க்கையில் இன்றுவரை மகிழ்வோடு வாழ்ந்தோம்.
வாழ்க்கையில் வருமொருநாளில் சாகவும் காத்திருக்கிறோம்
வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் சொல்வதும் இவைதான்
வாழ்க்கையில் வாழவேண்டியவர் கற்கவேண்டியதும் இவைதான்
வாழ்க்கையில் வெறுப்புகளை விதைக்காமல் வெல்லுங்கள்
வாழ்க்கையில் விருப்புகளை விதைத்தால் வாழலாம்
வாழ்க்கையில் வாழ்ந்துதான் பார்க்கலாம் வாருங்கோ!

சனி, 29 அக்டோபர், 2016

வானம் அழுவதால் தான் மழை!


புகை தள்ளும் உருளிகளின் கழிவு எல்லாம்
காற்றாலே வான்வெளியை நிரப்பிக் கொள்வதால்
தரை வெளியில் வீசுகின்ற கழிவு எல்லாம்
காற்றாலே வான்வெளியை நிரப்பிக் கொள்வதால்
சுமை தாங்க முடியாத வானம் அழுகிறதோ! - அதை
கண்டு பொறுக்க முடியாத பகலவன் தான்
வெயில் எறிக்க வைச்சு உறிஞ்சுவதால் தான்
உலகம் எங்கும் மழை இல்லையோ - சிலவேளை
பகலவன் ஓய்வுக்குச் செல்வதால் தான் - வானமழ
உலகம் எங்கும் மழை வெள்ளமோ?  - இயற்கையை
வெட்டி வீழ்த்தும் நம்ம ஆளுங்க
சூழலை அழுக்காக்கும் நம்ம ஆளுங்க
இயற்கையை இயல்பாகப் பேண உதவினால்
இயற்கையும் இயல்பாக இயங்கும் என்பேன்!