Translate Tamil to any languages.

வெள்ளி, 11 நவம்பர், 2016

தமிழில் ‘நன்றி’ என்பதைப் பிறமொழியில் எப்படிச் சொல்லலாம்.

Posted on மே 13, 2015 by yarlpavanan

தமிழில்நன்றிஎன்பதைப் பிறமொழியில் எப்படிச் சொல்லலாம் என்றறிய உதவிக்குக் கூகிளைப் பாவிக்கலாம்.
இணைப்பு: https://translate.google.com/


இடது பக்கத்தில் தமிழ் மொழியைத் தெரிவு செய்த பின் தமிழ் மொழியில் (லதா எழுத்துரு – unicode பாவித்து) தட்டச்சுச் செய்யுங்கள். வலது பக்கத்தில் விரும்பிய மொழியைத் தெரிவு செய்து வெளியீட்டைப் பெறலாம்.
எடுத்துக் காட்டாக:
இடது பக்கத்தில் நன்றி என வழங்க வலது பக்கத்தில் ஆங்கிலத்தில் Thanks என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் சிங்களத்தைத் தெரிவு செய்து பார்த்த போது ස්තූතියි என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் ஸ்பானிஸைத் தெரிவு செய்து பார்த்த போது gracias என வெளியாகியது.
அதேவேளை வலது பக்கத்தில் பிரெஞ்சைத் தெரிவு செய்து பார்த்த போது Merci என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் டொச்சைத் தெரிவு செய்து பார்த்த போது dank என வெளியாகியது. அதேவேளை வலது பக்கத்தில் டணிஸ்ஸைத் தெரிவு செய்து பார்த்த போது tak என வெளியாகியது.
எம்மொழியில் வெளியீட்டைப் பெற்றாலும் அம்மொழியில் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே தெளிவாக மொழி மாற்றிப் பகிர முடியும் என்பதை முதற்பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். இதுவரைத் தனிச்சொல்லை மொழி மாற்றிப் பகிர முயற்சி செய்தோம். அடுத்துவரும் பதிவில் இருசொல்களாலான வரிகளை (வசனங்களை) மொழி மாற்றிப் பகிர முயல்வோம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!