வலைப்பதிவர்
திருவிழா 2015 (http://bloggersmeet2015.blogspot.com/) புதுக்கோட்டை
மாவட்ட வலைப்பதிவர்களால் சிறப்பாக நாடாத்தப்பட்டது. பல முன்மாதிரிகளை
கண்டுகளித்தோம். வலைப்பதிவர் திருவிழா 2016 இடம்பெறவில்லை. இந்நிலையில் 18-12-2016
ஞாயிறு இணையத் தமிழ் பயிற்சி நடைபெறவுள்ளதாகப் பாவலர் முத்துநிலவன்
வலைப்பக்கத்தில் அறிய முடிந்தது.
கவிஞர்
வைகறையின் இழப்பும் புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவர் நிலைமையையும் எல்லோரும்
ஏற்றுக்கொள்வர். ஆயினும், இணையத் தமிழ் பயிற்சி முகாம் செயற்பாட்டை வரவேற்கிறேன்.
1.
புதிய வலைப்பக்கம் தொடங்கப் பயிற்சி
2.
விக்கிப்பீடியாவில் எழுதப் பயிற்சி
3.
யூடியூப் இல் (ஒளி-ஒலி) ஏற்றப் பயிற்சி
4.
பிழை திருத்தியைப் பயன்படுத்தப் பயிற்சி
5.
திரட்டிகளில் பதிவுகளை இணைக்கப் பயிற்சி
6.
நூல்களை மின்நூல்களாக்க உதவி, ஆலோசனைகள்
மேற்காணும்
பயிற்சிகளுக்கான செய்நிரலை வரவேற்கிறேன். இவை பதிவர்கள் எல்லோருக்கும் பயன்தரும்.
இலக்கியப்
படைப்புகளை சரியான, தரமான, பிறமொழிக் கலப்பற்ற நற்றமிழ் படைப்புகளாக வெளிக்கொணரப்
பயிற்சி வழங்கினால் சிறந்தது. இந்நிகழ்வு புதிய பதிவர்களுக்கல்ல மூத்த
பதிவர்களுக்கான நிகழ்வாயின் வேண்டாம்.
இவ்வாறான
நிகழ்வுகள் புதுக்கோட்டையில் முடங்கிவிடாமல் உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளில்
இடம்பெற வேண்டும். அதற்காகப் புதுக்கோட்டை மாவட்ட வலைப்பதிவர்களின் முயற்சிகளை
உங்களுடன் பகிருகிறேன்.
முழு
விரிப்பையும் உளநிறைவோடு படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!