நான் கருத்துப் பகிர்ந்த வேளை, என் உள்ளத்தைச் சுட்ட
செய்தீயை முதலில் தருகின்றேன்.
தெருப் பள்ளியில நடந்த
ஆசிரியர் - மாணவர் கருத்து
மோதலில்...
"மக்கள் சாவுக்குக்
காரணம்
யாரென்று தெரியுமா?"
என ஆசிரியர்
கேள்வியைத் தொடக்கி விட...
"வசூல் ராஜா
MBBS, வசூல் ராணி MBBS" என
மாணவர்களும் பதில்களை இறுக்கி
விட...
"இவங்க எல்லாம் எங்க
இருக்காங்க?" என ஆசிரியர்
கேள்வியை மீள முடுக்கி
விட...
"திரைப்படத்தில கமல்
அப்படி நடிச்சாரு!,
ஜோக்காளி வலைப்பூவில
சமீனா அன்ட் 'சபீனா' பதிவில
பாரும்
மாணவர்களும் பதில்களை மீள
முடுக்கினரே!
இனி நம்ம எண்ணங்களில்...
போலி மருத்துவர்களால் பாதிக்கப்படுவது
நம்ம உறவுகளே என்றுணருவோமே!
மருத்துவர் பதிவு இலக்கம்
உள்ள
அல்லது
அரசு அனுமதித்த அடையாளம்
கொண்ட
மருத்துவரை நாடினால் நலம்
அடைவோமே!
உடலில் நோய்களின் வருகை
தென்பட்டால்
உடனடியாக மருத்துவரை நாடுவதே
நெடுநாள் நலமாக வாழ வழியென்பேன்!
நான் கருத்துப் பகிர்ந்த வேளை, இரண்டு வலைப்பூவில் பகிர்ந்த
கருத்துகளைப் பகிருகிறேன்.
நன்மை செய்யுங்கள்
நன்மை கிட்டும்
பயன்தரும் முன் முயற்சி
செய்தோரை
பயன்பெறும் பயனர்
ஒருபோதும் மறவார்
மறவாது புதிய
முகங்களும் முயன்றால்
இறந்தும் வாழ்வோம்
நன்மை செய்தமைக்கே!
சாதிக்காகச் சண்டை
வேண்டாம் - ஆனாலும்
பாரதியார் சொல்லிவைச்ச
மாதிரி - சாதிகள்
இரண்டு உண்டு என்று
அறிவோம் - அவை
ஆண் சாதி, பெண் சாதி
என்போம் - இவை
சமஉரிமை பெற்றால்
சண்டைகள் வராதாம்!
ஊர்திகளில் பயணித்த வேளை படித்த பல செய்தீக்களில் இரண்டைப்
பகிருகிறேன்.
ஊர்தி ஓட்டுநர்
விழிப்பாக ஓடும் வரை
பயணிகள் நன்றே
தூங்கிப் பயணிக்கலாம்
ஊர்தி ஓட்டுநர் ஓடும்
வேளை தூங்கினால்
பயணிகள் பயணிக்காது
தூங்கி விடலாம்
"நேரும்
விபத்துகளால்..."
நடத்துநரின் கையில்
பணத் தாளை நீட்ட
பற்றுச் சீட்டைத்
தந்தவர் மிச்சக் காசிற்கு
கையில ஐந்து இனிப்பை
நீட்டியே நகர்ந்தார்!
பயணியும் சற்றுத்
தள்ளி இறங்கிச் செல்ல
நடத்துநரோ மேலதீகத்
தூரத்திற்குப் பணம் கேட்க
பயணியும் ஐந்து
இனிப்பை நீட்டியே நகர்ந்தார்!
"புதிய கொடுக்கல்
- வேண்டல்"
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!