நல்ல
உணவுக்குப் பணம் வேண்டும்
நல்ல
உடைக்குப் பணம் வேண்டும்
நல்ல
உறைவிடத்திற்குப் பணம் வேண்டும்
நல்ல
உறவுகளுக்குப் பணம் வேண்டும்
நல்ல
வாழ்வமையப் பணம் வேண்டும்
நல்ல
உழைப்பானாலும் பணம் பறக்கிறதே
நான்
பணத்தை எங்கே தேடுவேன்!
அரசும்
பொருட்களின் விலையை ஏற்றுதே
அடியேனின்
கூலியைக் கூட்ட மறுக்குதே
எடுக்கிற
கூலியோ உண்டுறங்கப் பத்தாதே
உடுக்கிற
உடுப்பு வேண்டப் போதாதே
எப்பவும்
சேமிப்பில பணம் இருக்காதே
இப்படிப்
போனால் எவளென்னை விரும்புவாள்
நான்
பணத்தை எங்கே தேடுவேன்!
சொந்தப்
பணமும் நிற்காமல் ஓடுதாம்
அந்தப்
பெண்ணும் என்னை நாடாளாம்
இந்தத்
துயருக்கும் கைகெட்டாப் பணமாம்
வந்த
பணமும் என்னோடு ஒட்டாதாம்
எந்தப்
பெண்ணும் என்னைக் கட்டாளாம்
இந்த
நிலைக்கும் பணமில்லா நானாம்!
நான்
பணத்தை எங்கே தேடுவேன்!
இப்பவும்
உழைத்துக் கொண்டே இருக்கிறன்
எப்பவும்
என்னிடம் பணம் இருக்காதாம்
அப்பனும்
நாலு பணம் உழைக்கட்டாம்
அப்பதான்
எவளாச்சும் என்னைக் கட்டுவாளாம்
எப்பதான்
எவளாவது உன்னைக் கட்டுவாள்
அப்பதான்
சாவேனென அம்மாவும் அழுகிறாள்
எப்பனும்
ஊருக்குள்ள உலாவ முடியல்ல
நான்
பணத்தை எங்கே தேடுவேன்!
நான்
பணத்தை எங்கே தேடுவேன்!
நான்
குணத்தை விற்றும் தேடுகிறேன்
நான்
பணத்தை எங்கேயும் கண்டிலேன்
நான்
மணந்து பார்த்தும் தேடுகிறேன்
நான்
பணத்தை எங்கேயும் கண்டிலேன்
நான்
பணத்தை எங்கே தேடுவேன்!
எனது
எண்ணங்கள் இப்படி என்றால்,
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின்
எண்ணங்கள்
எப்படி இருக்கும் என்பதை
கொஞ்சம்
பார்த்துப் படித்துப் பாருங்களேன்.
இப்பாடலை
'பணம்' படத்திற்காக என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இயற்றிப் பாடியுள்ளார்.
எங்கே
தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை
எங்கே தேடுவேன்?
உலகம்
செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம்
செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர்
முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே
தேடுவேன்?
அரசர்
முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே
தேடுவேன்?
கருப்பு
மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன்
கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கருப்பு
மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன்
கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி
ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
கிண்டி
ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின
பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே
தேடுவேன் பணத்தை
எங்கே
தேடுவேன்?
பூமிக்குள்
புகுந்து புதையலானாயோ?
பொன்
நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
பூமிக்குள்
புகுந்து புதையலானாயோ?
பொன்
நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள்
அணிகளில் சரண்புகுந்தாயோ?
சாமிகள்
அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி
கோலத்தோடு உலவுகின்றாயோ?
எங்கே
தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
திருப்பதி
உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை
குகை புகுந்தாயோ?
திருப்பதி
உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை
குகை புகுந்தாயோ?
இருப்புப்
பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இருப்புப்
பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம்
இருக்காத பணந்தனை
எங்கே
தேடுவேன் பணத்தை
தேர்தலில்
சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக
சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
தேர்தலில்
சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக
சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள்
தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சுவற்றுக்குள்
தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ்
சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?
எங்கே
தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை
எங்கே தேடுவேன்?
உலகம்
செழிக்க உதவும் பணமே பணமே பணமே
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!