Translate Tamil to any languages.

வியாழன், 10 நவம்பர், 2016

முற்றுப்புள்ளி (பரிசு பெற்ற கவிதை)

உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
https://plus.google.com/communities/110989462720435185590
என்ற குழுவில் உங்கள் புதிய பதிவுகளை இணைத்து உதவுங்கள்.
அறிவுப்பசி உள்ளவர்கள் தேடிப் படிக்க நீங்கள் உதவியதாக அமையும்.


வாசிப்புப் போட்டி - 2016
https://seebooks4u.blogspot.com/2016/10/2016.html


வரவைத் அழிக்கும் செலவுக்கும் கூட
குடியைக் அழிக்கும் குடிக்கும் கூட
உடலை அழிக்கும் புகைக்கும் கூட
உறவை அழிக்கும் கெட்டதிற்கும் கூட
பண்பாட்டை அழிக்கும் பழக்கத்திற்கும் கூட
ஒழுக்கம் இன்மைக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!

முரண்பாடுகள் முளைக்காமல் இருக்கக் கூட
முறுகல்கள் தோன்றாமல் இருக்கக் கூட
மோதல்கள் தொடராமல் இருக்கக் கூட
முறிவுகள் மலராமல் இருக்கக் கூட
சாவுகள் நிகழாமல் இருக்கக் கூட
அமைதி இன்மைக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!

நட்புகள் நலமாக அமையத் தான்
உறவுகள் அன்பாக இணையத் தான்
காதலும் சுகமாக ஈடேறத் தான்
மணவாழ்வு மகிழ்வோடு தொடரத் தான்
மழலைகள் அறிவோடு வளரத் தான்
புரிதல் இன்மைக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!

தமிழில் ஒன்றைச் சொல்லி முடிக்கையில்
தமிழில் இடுவது முற்றுப் புள்ளியே!
காற்புள்ளி, அரைப்புள்ளி இருந்தாலும் கூட
ஏற்றிடு முற்றுப் புள்ளி இடுவதையே!
தமிழைக் கற்றிடு, தமிழிலேயே பாப்புனைக
பிறமொழிக் கலப்புக்கு வைக்கணும் முற்றுப்புள்ளியே!


தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு 2016 அக்டோபர் மாதத்தில் நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை இது. இதனால் எனக்குக் கவியருவி பட்டமும் சான்றிதழும் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்குக.
http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/2016_57.html

அன்புள்ள வலையுறவுகளே! எனக்கு ஏற்கனவே கவிமுரசு (இந்தியாவில்), கலைத்தீபம் (இலங்கையில்) ஆகிய பட்டங்களும் கிடைத்ததை முன்னர் அறியத் தந்தேன்.
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_18.html

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!