இந்தியாவில் 18 ஜூலை 2017 நாளில் 'தி இந்து' நாளேட்டில் 'நிசப்தம்
அறக்கட்டளை' குறித்தான கட்டுரை வெளியாகிருப்பதை உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுவில்
GOPAL USML-HO அவரது பதிவைப் படித்ததும் அறிந்தேன். அவரைப் பாராட்டாமல் எந்த வலைப்பதிவரும்
இருக்கமாட்டார்கள். இதோ எனது உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிருகிறேன்.
அறிஞர் வா.மணிகண்டன் அவர்களை - நான்
இதுவரை நேரில் கண்டதில்லை.
அவரது வலைப்பக்கம் சென்றிருக்கிறேன்.
அவரது வலைப்பதிவுகளைப் படித்திருக்கிறேன்.
அவரது பணிகளைப் பற்றியும் அறிந்திருக்கிறேன்.
"அவரது பணிக்குக் கிடைத்த நிதியினை
வரவு-செலவுக் கணக்கோடு சான்றுகளை இணைத்து
கொடையாளிகளுக்கும் வாசகருக்கும் காண்பித்து
நம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம் என்பவற்றைப் பெற்றாலும்
தானும் நன்கொடை செய்துள்ளார்!" என்பதை
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும்
அறிந்திருப்பார்கள் - அந்தப்
புனிதரை நாமும் பாராட்டுவோம்! - அவரது
பணி சிறக்க நாமும் ஒத்துழைப்போம்!
அறிஞர் வா.மணிகண்டன் அவர்களைப் போல
உங்கள் ஊராருக்கும் உங்கள் நாட்டவருக்கும்
உங்களால் உதவ முடியுமா? - அவ்வாறு
உதவும் எல்லோருக்கும் - எனது
பாராட்டும் வாழ்த்துகளும் உரித்தாகுக.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!