Translate Tamil to any languages.

வியாழன், 4 செப்டம்பர், 2014

தமிழரில்லாத இலங்கை

தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறிக்கொண்டு வருவதை
நினைவூட்டலாமா...
மாறிவிடும் என்பதை
'நினைவிற் கொள்க' என்று
எடுத்துக் கூறலாமா...
எதைக் கூறுவதென்று
என் உள்ளம்
குழம்பி நிற்கின்றதே!
ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு இயக்கம்
ஆளுக்கொரு கொடி
எத்தனையோ பிறந்து இருந்தன...
'தமிழருக்கு விடுதலை' பெற்றுத் தருவதாக
எல்லோருமே கூறி நின்றன...
பின்னர்
'தமிழரை ஆள்வது யார்?' என்று
ஆளுக்காள் போட்டி போட்டு
அழிந்து போயின என்றோ
அழிவதற்குத் தயார் என்றோ
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
1983 ஆடிக் கலகம்
சுடுகலன் போரை அறிமுகம் செய்ததா?
எந்தெந்த நாடுகளுக்கு
ஏதிலியாகப் போகலாம் என்பதை
அறிமுகம் செய்ததா?
தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறுவதைக் கண்டு உணரலாமே!
புலிகளை அழித்ததும்
வன்முறைப் போருக்கு
முற்றுப்புள்ளி வைத்தாச்சே...
சுடுகலன் ஏந்துவோர்
எவராயினும் இருப்பின் அழிக்கப்படுவார்களே...
இன்றைய ஈழத் தமிழர்
இப்படித்தான்
முணுமுணுப்பதைக் காணலாமே!
ஈழத் தமிழரின்
முணுமுணுப்புக்குள்ளே
மறைந்திருப்பது என்ன?
தனிப் பெரும்
சிங்களத் தலைமையை ஏற்பது
நன்று என்று தானே இருக்கும்!
எப்படியாயினும்
தமிழர் நலம் பேணுவதாயின்
கட்சிகளோ இயக்கங்களோ
ஒன்றிணைய மறுத்தால் நடப்பதென்ன?
கட்சிகளாயின்
தடைபோட்டுச் செயலிழக்கச் செய்யலாமே...
இயக்கங்களாயின்
புலிகளை இல்லாது ஒழித்தது போல
அழிந்து போகச் செய்யலாமே...
அப்படியாயின்
யார் நலனை யார் பார்ப்பது?
உலகெங்கும் வாழும்
ஈழத் தமிழினமே
உண்மையைக் கூறுவீர்களா?
ஈழத் தமிழர் நலன் பேணாத
எந்தச் சக்தியும் இருந்தும்
பயனில்லைக் கண்டியளோ!

15 கருத்துகள் :

  1. வணக்கம்
    அண்ணா.

    படித்த போது மனம் உருகியது... நல்ல காலம் விரைவில் மலரும்... பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      தமிழ்மணத்தில் வாக்களித்து எனது பதிவிற்கு வலுச் சேர்த்துள்ளீர்கள்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. 'தமிழருக்கு விடுதலை' பெற்றுத் தருவதாக
    எல்லோருமே கூறி நின்றன...
    பின்னர்
    'தமிழரை ஆள்வது யார்?' என்று
    ஆளுக்காள் போட்டி போட்டு
    அழிந்து போயின என்றோ
    அழிவதற்குத் தயார் என்றோ
    பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
    1983 ஆடிக் கலகம்
    சுடுகலன் போரை அறிமுகம் செய்ததா?
    எந்தெந்த நாடுகளுக்கு
    ஏதிலியாகப் போகலாம் என்பதை
    அறிமுகம் செய்ததா?
    தமிழரின் இலங்கை
    தமிழரில்லாத இலங்கையாக
    மாறுவதைக் கண்டு உணரலாமே!//

    மிக ஆழமான உண்மையான வார்த்தைகள்! தாய் நாட்டிற்கு திரும்புவோமா என்று ஏங்கும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு எங்கள் பிரார்த்தனைகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்
      தாய் நாட்டிற்குத் திரும்புவோரை
      வணங்கி வரவேற்கிறேன்
      மிக்க நன்றி

      நீக்கு
  3. தங்களின் உண்மையான நேர்மையான ஆதங்கம் புரிகிறது

    பதிலளிநீக்கு
  4. சுயநலக் கூட்டம் இருக்கும் வரை விடிவுகாலம் வருமாவென்று தெரியவில்லை !

    பதிலளிநீக்கு
  5. விடியும் என்ற நம்பிக்கையில் வாழ்வோம் நண்பரே....

    பதிலளிநீக்கு
  6. வாட்ட முறவே வரும் வலிகள் நீங்கும் விரைவில் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  7. தங்களது ஆதாங்கம் புரிகிறது.
    இலங்கை நாட்டிற்கு நிரந்தரமாக திரும்புவோமா என்று இலங்கை தமிழ் சகோதர சகோதரிகள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவது அறியாமை, அப்பாவிதனம். போர் நடைபெற்ற காலங்களில் இலங்கைக்கு விடுமுறைகளுக்கு செல்ல முடியவில்லையே என்று கவலை கொண்டிருந்தனர். தற்போது போர் அற்ற சூழலில் இலங்கைக்கு விடுமுறைகளுக்கு தாராளமாக சென்று வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. தமிழரை ஆள்வது யார்?' என்று
    ஆளுக்காள் போட்டி போட்டு
    அழிந்து போயினர்.--வருத்தமாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!