Translate Tamil to any languages.

புதன், 17 செப்டம்பர், 2014

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.

என்னைப் பற்றி...
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,

தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.

எனது வலைப்பூ முயற்சிகள்.... 
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/

எனக்களித்த விருது...
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்...
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://muthuputhir.blogspot.com/
http://kavithaivaanam.blogspot.in/
http://enganeshan.blogspot.in/
http://psdprasad-tamil.blogspot.in/
http://chellappatamildiary.blogspot.com/
http://writeinthamizh.blogspot.in/
http://marabukkanavukal.blogspot.in/
http://www.kaviaruviramesh.com/
http://www.rishvan.com/
http://www.hishalee.blogspot.in/


28 கருத்துகள் :

  1. பொருத்தமான விருதுதான்.இணையத்தில் தமிழ் ஆர்வத்துடன் செயல்படும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மையில் தாங்கள் பொருத்தமானவரே.... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அண்ணா.

    தங்களின் பெரு மனதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் தாங்களும் விருது பெற்று மற்றவர்களுக்கும் விருது வழங்கியமைக்கு நன்றிகள் பல... அம்மாடி .... எவ்வளவு திறமை நான் திகைத்து விட்டேன்.... மேலும் பல விருது கள் வந்தடைய எனது வாழ்த்துக்கள்
    த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா!

    விருதினைப் பெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள்!

    தங்களைப் பற்றி அறியத்துள்ளீர்கள்! மிகச் சிறப்பு!
    விரைவில் தங்களுக்கும் பெயர் சொல்ல வாரிசு
    கிடைத்திட வேண்டி வாழ்த்துகிறேன்!

    தங்களிடமிருந்து விருதினைப் பெறும் நட்புக்களுக்கும்
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. மேலும் பல விருது கள் வந்தடைய வாழ்த்துக்கள்!
    Vetha.Langathilakam.

    பதிலளிநீக்கு
  6. வாழ்க ஐயா .... அணிலுக்கும் அரியணையைப் பகிர்நதளிக்கத் துணிந்த பெருந்தன்மைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. நானே உங்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டுமென நினைத்து இருந்தேன் ,சகோ .ரூபன் முந்திக் கொண்டுவிட்டார் .யார் கொடுத்தால் என்ன ,சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதே ...வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. பொடியனு(?!)க்கு கிடைத்த விருதை இந்த அடியனுக்கும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ! வாழ்க தமிழ் ! வளர்க உங்கள் தமிழ்ப் பணி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலும், இந்த செய்தியினை எனது வலைப்பூவிலும், இந்த பதிவுக்கான இணைப்புடன் பதிவு செய்துள்ளேன்.

      நீக்கு
    2. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்புகெழுமிய யாழ்பாவாணரே! தாங்கள் அன்போடு வழங்கிய விருதுக்கு மிக்க நன்றி என்று மூன்று முறை சொல்வேன்! போதுமா? (இந்த வாரம் எனது ராசிக்கான பலனில் ஒரு பதிவர்-சோதிடர் சொல்லியிருந்தார்: 'வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்' என்று! அது இது தான் போலும்! அவருக்கும் நன்றி!) - இராய செல்லப்பா, சென்னை.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

    கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
    http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html

    படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.

    அன்புடன்,
    இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  11. விருதைப் பெற்றமைக்கும் மற்றவர்களுக்கு அளித்தமைக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!