Translate Tamil to any languages.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பதிவர்களும் பதிவுகளும்

என்னைப் பாடச் சொன்னால்
என்னென்னமோ பாடுவேன்
ஆனால்,
என்னை எழுதச் சொன்னால்
என்னென்னமோ எழுதுவேன்
எப்படியோ
பாடினால் பொருள் இருக்காது
எழுதினால் தமிழ் இருக்காது
அதுக்குத் தானே
வலைப்பக்கங்கள் (Web Pages)
வலைப்பூக்கள் (Blogs)
கருத்துக்களங்கள் (Forums)
அப்படி எழுத உதவுகிறது என்பேன்!
ஆனாலும் கூட
அச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட
மின் ஊடகங்களில்
சிறப்பாக எழுதுவோரும் இருப்பதை
எவரும் மறுப்பதற்கு இல்லையே!
அதனால் தான் பாருங்கோ
எடுத்துக்காட்டுக்கு
"நன்றி அஆ வலைப்பூ" என
அச்சு ஊடகங்கள்
சிறந்த பதிவர்களின் பதிவை
மீள்பதிவு செய்கின்றனவே!
ஆனாலும் பாருங்கோ
சில பதிவர்கள்
அச்சு ஊடகப் பதிவுகளை
மின் ஊடகங்களில் பதிகின்றனரே!

12 கருத்துகள் :

  1. அருமை சார் !!!

    அச்சு ஊடகங்களை காட்டிலும் , பதிவுகளின்வழி , சிறப்பாக எழுதும் பலர் இருக்கின்றனர் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! உண்மை!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. அச்சு ஊடகங்கள் பல இன்று நச்சு ஊடகங்கள் ஆகி , விட்டன! நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! உண்மை!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. ""அச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட
    மின் ஊடகங்களில்
    சிறப்பாக எழுதுவோரும் இருப்பதை
    எவரும் மறுப்பதற்கு இல்லையே!""

    சரியாகச் சொன்னீர்கள் சார்,உண்மைதான் காப்பி பேஸ்ட் செய்கிறவர்கள் இருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! உண்மை!
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. மிக அருமையாக சொன்னீர்கள்! அச்சு ஊடகங்களை பின்னுக்கு தள்ளுகின்றன வலைப்பூக்கள்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. சொந்தப் படைப்புக்ககளை வலைப் பூக்களில் பகர்வதையே நானும் வரவேற்கிறேன் !

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!