Translate Tamil to any languages.

புதன், 10 செப்டம்பர், 2014

பொங்கின புக்கை

தைப்பொங்கலை ஒட்டிப் பல பொங்கல்கள் வருமே! அந்த வேளை இப்படி இருவர் நாடகமாடினர்.

முதலாமவர் : ஒருவரையும் நம்பிப் பிழைக்க ஏலாதுங்க...

இரண்டாமவர் : எல்லோரும் ஒருவரையே நம்பிப் பிழைக்கிறாங்களே!

முதலாமவர் : எப்படி அப்பா இப்படிப் போட்டுடைப்பா...

இரண்டாமவர் : பகலவனை நம்பித் தானே!

முதலாமவர் : அதெப்படியப்பா...?

இரண்டாமவர் : தைப்பொங்கலை வைச்சுத்தானப்பா...
...
முதலாமவர் : எடுத்துக்காட்டுக்கு ஏதாச்சும் சொல்லப்பா...

இரண்டாமவர் : பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை தானே அதிகம்... கொஞ்சம் மூளைக்கு வேலை கொடேன்...

16 கருத்துகள் :

  1. பகலவனைத் தவிர்க்கவோ பகைகவோ முடியாது.உண்மைதான்

    பதிலளிநீக்கு
  2. நல்ல உரையாடல். உண்மையை எவ்வளவு எளிதாக எடுத்துரைத்தீர். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மூளையே இல்லாதவர்கள் எப்படி மூளைக்கு வேலை கொடுக்க முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூளையே இல்லாதவர்கள்
      உயிரோடு இருக்கமாட்டார்கள்!
      மூளை இருந்தும்
      பயன்படுத்தாதவர்களே அதிகம்...
      இப்பதிவில்
      பிழைத்தல், பகலவன் ஆகிய
      இரு சொல்லும் தான்
      மூளைக்கு வேலை!

      நீக்கு
  4. நண்பரே தங்களின் உதவியில் எனது ஒரு புதிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான பதிவைத் தந்தமைக்குப் பாராட்டுகள்.
      மேலும் மேலும் ஆற்றலைப் பெருக்கி
      கில்லர்ஜி இன் பதிப்பு என்றால்
      தனி அடையாளம் இருக்குமென
      முன்னேற வாழ்த்துகள்!

      நீக்கு
  5. தாங்களும் மூளைக்கு வேலைக் கொடுக்கிறியளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாழ்பாவாணனின் எழுத்துகளையே பதிவு செய்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. ''..பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை தானே அதிகம்... ''
    ஊரிலே கேட்ட வரிகள். நினைவு படுத்தலுக்கு நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  7. இதன் அர்த்தம் என்ன நண்பரே! புரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழைத்தல் என்பது
      வாழ்தல் என்று பொருள்!
      உலகிலுள்ள ஒவ்வொருவரும் வாழ
      பகலவன் (சூரியன்) பணிசெய்கின்றான்! - அந்தப்
      பகலவனுக்கு நன்றி தெரிவிக்கவே
      தைப்பொங்கல்!
      தைப்பொங்கலுக்கு அடுத்த நாள்
      உழவருக்கு உதவிய
      மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கவே
      பட்டிப்பொங்கல்!
      பொங்கல் காலத்தில்
      பொங்க இயலாதவர்களுக்கு
      அண்டை, அயலார் பொங்கியதும்
      சிறு அளவு புக்கை (பொங்கல் அமுது)
      வழங்குவதை வழக்கத்தில் காணலாம்!
      பொங்காதவர் வீடுகளில்
      புக்கை நிரம்பியிருப்பதை கண்டு
      "பொங்கின புக்கையை விட
      தண்டின புக்கை அதிகம்" என்பது
      பொங்கல் காலத்துப் பேச்சுத்தான்!
      ஏழைகள் வீடு வீடாகச் சென்று
      பொங்கல் காலத்தில் பசியாறும் போதும்
      புக்கை நிரம்பப் பேசுவதும் இதுவே!
      மொத்தத்தில் இத்தனைக்கும்
      பகலவன் (சூரியன்) தானே என்று
      எண்ண இடமளித்தேன்!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!