நண்பர் கிங்ராஜ் தளத்தில்
http://kingrajasc.blogspot.com/2014/09/blog-post_10.html
"ஒரு கடி" என்ற தலைப்பில்
“அந்தக் கப்பல் ஏன் ரொம்ப ஆடி ஆடி வருது?”
“அதுவா அது ‘சரக்கு கப்பல்’ அதுதான் ஆட்டம் அதிகம் இருக்கு”
என்றவாறு எழுதியிருந்ததைப் படித்ததும் இப்படி எழுத எனக்கும் தோன்றிச்சு! அதைக் கொஞ்சம் படித்த பின் கருத்துப் பகிர்வோமா...
நெடுநேரம் எண்ணிப் பார்தேன்
தென்னை மரம் ஏன் ஆடுது என்று
பின்னர் தான் தெரிந்து கொண்டேன்
அது தானே கள்ளையும் தருகிறது என்று
இப்படி நான் எழுதியதைப் படித்த பெரியோர் "யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடன்" என்பார்கள். உண்மையில் இதனைப் பாவரசர் கண்ணதாசன் தனது புத்தகமொன்றில் பதிவு செய்திருப்பதை படித்த பெரியோர் அறிந்தமையால் அப்படிச் சொல்ல முடிந்திருக்கிறது. அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்தல் இலக்கியத் திருட்டு என்றே கூறவேண்டும்.
என்ன காணும் வலைப்பதிவு உலகில் யாழ்பாவாணன் தானே அடுத்தவர் பதிவை இடையிடையே புகுத்தி எழுதுகிறார்; இன்னும் பிறர் கண்ணில் சிக்கவில்லையா என்கிறீர்களா? அதற்கு முன் அங்கே படித்தேன்; அதில, இதில, உதில ஏட்டில் இருந்தது; அந்த, இந்த, உந்த இணைப்பில் இருந்தது என்றெழுதித் தப்பிக்கிறார் போலும்.
வலைப்பதிவர்களே! அடுத்தவர் பதிவுக் குறிப்புகளைத் தங்கள் பதிவுகளில் சான்றுக்காக இடையிடையே புகுத்தலாம். ஆயினும், புகுத்திய பதிவுக் குறிப்பை எழுதியவர் அல்லது வெளியிட்டவர் விரிப்பைச் சுருக்கிச் சுட்டியிருப்பின் இலக்கியத் திருட்டு இல்லை என்பேன். இல்லையேல் அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் வண்ணங்களில் வெளிப்படுத்த முன்வாருங்கள். எடுத்துக்காட்டாகப் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தை என் வண்ணத்தில் காட்டுகிறேன் பாரும்.
1
நல்ல நண்பர் வந்தார்
மெல்லத் தள்ளாடியே வந்தார்
சொல்லத் தடுமாறினார் - அவர்
மதுக்கடையில் இருந்து வந்ததை...
2
அங்குமிங்கும் ஆடும் பனையைப் பார்த்து
காற்றோடு பனை மரம் மோதுகிறதா
காற்றும் வேகமாய் அடித்து வீசுகிறதா
என்றெல்லாம் எண்ணிய பின்
பனையும் கள்ளைத் தருமெனப் படித்தேன்!
3
ஆடி ஆடித் தள்ளாடி வந்தால்
பாடிப் பாடிப் பாவாணனும்
அரை வயிற்றிற்கு உள்ளே தள்ளுவார்
நரைக் கிழவி விற்கும் குடிதண்ணீரென
என் காதலி
தன் தோழிக்குச் சொன்னாளாம்!
என் பாவண்ணத்தில் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தைப் படித்தீர்களா? நண்பர் கிங்ராஜின் கப்பல் கடியைப் படித்தீர்களா? எவரது எண்ணத்தையும் எவரும் தங்கள் கைவண்ணத்தில் எழுதலாம். அது இலக்கியத் திருட்டு அல்ல. அப்படி என்றால், வலைப்பதிவர்களே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்களேன்.
அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்து இலக்கியத் திருடனென்று பெயரெடுக்காமல், அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் கைவண்ணத்தில் ஆக்கிச் சிறந்த படைப்பாளி ஆக முன் வாருங்கள். இதற்குத் தான் பிறரது படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்க வேண்டுமென எனக்கு வழிகாட்டிய படைப்பாளிகள் சொன்னார்கள்.
Translate Tamil to any languages. |
வெள்ளி, 12 செப்டம்பர், 2014
யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடனா?
லேபிள்கள்:
7-ஊடகங்களும் வெளியீடுகளும்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
நண்பர் கிங்ராஜ் அவர்களின் பதிவை படித்தேன் நண்பரே... பதிவரின் பெயரை குறிப்பிட்டு எழுதும்போது அது திருட்டு ஆகாது என்றுரைத்ததை நான் வழி மொழிகிறேன் நண்பரே,,,, உண்மையான வார்த்தை.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கருத்துள்ள கட்டுரை.
பதிலளிநீக்கு// அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்தல் இலக்கியத் திருட்டு என்றே கூறவேண்டும்.//
அடுத்தவர் ஒப்புதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இன்னாருடைய படைப்பு என்று மேற்கோள் காட்டுதல் அவசியம். இது இலக்கியத் திருட்டு ஆகாது. தனது படைப்பு போல காட்டுதல்தான் தவறு.
தங்கள் கருத்து
நீக்குஎனது பதிவிற்கு மிகவும் வலுச்சேர்க்கிறது.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
உண்மைதான் சார், இலக்கியத்திருட்டு வலையுலகில் மட்டுமல்ல சில நேரங்களில் கலையுலகிலும் கூட நிகழுகிறது... நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
சிறந்த கருத்துகளை செம்மையாக கூறியுள்ளீர்கள் அண்ணா !!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அடுத்தவரின் கருவையே உரு மாற்றிச் சொன்னால் திருட்டு ஆகாது ,அப்படித்தானே ?
பதிலளிநீக்குஅடுத்தவரின் கருவையே
நீக்குஉரு மாற்றிச் சொன்னால்
திருட்டு ஆகாது என்பேன்...
அதாவது
அடுத்தவரின் கரு என்பது
அடுத்தவர்
சொல்ல வந்த செய்தியே...
அடுத்தவர் சொல்ல வந்த செய்தியை
நாம்
எமது கைவண்ணத்தில் வெளியிட்டால்
எப்படி இலக்கியத் திருட்டு ஆகும்?
நல்லதொரு அறிவுரை! நல்ல விளக்கம்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.