Translate Tamil to any languages.

சனி, 27 செப்டம்பர், 2014

பாடல் எழுதலாம் வாங்க


பாட்டுக் கேட்டுப் பாட்டெழுத வாங்க
மெட்டுப் போட்டு பாட்டெழுத வாங்க
                                                                               (பாட்டுக்)
சொல்லைப் போட்டுப் படித்துப் பாருங்க
மெல்லக் கேட்டு இசைத்துப் பாருங்க
                           (                                                   (சொல்லைப்)
                                                                               (பாட்டுக்)
அடிமோனை சீர்மோனை வந்திச்சா
அடியெதுகை சீரெதுகை வந்திச்சா
அடிதொடை அழகாய் வந்திச்சா
நெடில்குறில் நினைப்பில் வந்திச்சா
கோலமகள் பொருளாக வந்திச்சா
பாலநிறம் உவமையாக வந்திச்சா
அசைகூட்டிச் சீரமைக்க வந்திச்சா
இசைகூட்டிப் பாவெழுத வந்திச்சா
                                                                                (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
வேலவனே உனைப்பாட வந்தேன்
காலையிலே உனைநாடி வந்தேன்
வேளைக்குப் பதவியுயரப் போறேன்
நாளைக்குத் தேர்வெழுதப் போறேன்
இலகுவாய்த் தேர்வெழுத வரட்டும்
இலகுதாள் எனக்காய் வரட்டும்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
வேலாவா எனவெழுத வந்திச்சா
                                                                        (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
கண்டேன் அவளைக் கண்டேன்
கண்டேன் அவனைக் கண்டேன்
கண்டேன் அவர்களோடக் கண்டேன்
கண்டேன் காதலெனக் கண்டேன்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
கண்டேன் எனவெழுத வந்திச்சா
                                                                                 (பாட்டுக்)
                                                                         (சொல்லைப்)
என்னை மறந்து போவேன்
உன்னை மறந்து போவேனா?
உன்னை மறந்து போவேன்
உண்ண மறந்து போவேனா?
கண்னை மறந்து போவேன்
உறங்க மறந்து போவேனா?
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
மறந்து எனவெழுத வந்திச்சா
                                                                           (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
சின்ன இடை அழகைக் கண்டேனே
அன்ன நடை அழகைக் கண்டேனே
மெல்ல நடை நடந்து வந்தேனே
மெல்ல விலகக் கண்டு நொந்தேனே
செல்லமே உந்தன் இழுவை என்பேனே
எல்லாம் எந்தன் அகவை என்பேனே
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
காதல் வந்ததென எழுத வந்திச்சா
                                                                              (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
எழுத எண்ணினால் எழுத வருமே
அழுத கண்ணீரையும் எழுத வருமே
எழுத முயன்றால் எழுத வருமே
முழுதாய் வாழ்வையும் எழுத வருமே
இசையோடு எழுத வந்தால் வருமே
இசையோடு இசைத்துப் பாட வருமே
                                                                            (பாட்டுக்)
                                                                           (சொல்லைப்)


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

4 கருத்துகள் :

  1. வணக்கம் ஐயா!

    உங்கள் பாடல் அருமை ஐயா!..
    இப்போ இன்னும் எழுத எனக்கும் தோணுது ஐயா!

    நல்ல பகிர்வு!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா !

    எதுகையும் மோனையும் எப்போதும் வேண்டும்!
    புதுமை படைத்தீர் உணர்வில்! -முதுமையிலும்
    குன்றாது பாட்டில் குறிலும் நெடிலுமிங்கே !
    வென்றிட தந்தீர் வரம்!

    மிக்க நன்றி ஐயா !பாப்புனையும் அனைவருக்கும் ஏற்ற நற் கருத்து
    அருமையான பாடல் வரிகளில் !வாழ்த்துக்கள் .வாழ்க தமிழ் !

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!