Translate Tamil to any languages.

சனி, 13 செப்டம்பர், 2014

வெளிநாட்டில் உள்ளவருக்கு...

அவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை
கண்டுபிடித்தவர்களை விட
உலகில் எந்தெந்த நாடுகள்
ஏதிலி(அகதி)யாக இருக்க
இடம் கொடுக்குமெனக் கண்டுபிடித்தவர்கள்
யாரென்றால்
இனமோதல்களால் புலம் பெயர்ந்த
இலங்கைத் தமிழர்களே!
புலம் பெயர்ந்த படைப்பாளிகள்
இருக்கும் வரை தான்
உலகின் முலை முடுக்கெங்கிலும் இருந்தும்
ஈழத்துத் தமிழ் இலக்கியம்
வெளிவர வாய்ப்புண்டாம்!
போன உறவுகளும் போன நாட்டில்
போன நாட்டு வாழ்வோராக
மாறிப் போன பின்னர்
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை
வெளிக்கொணர்வார்களென
எப்படி நம்பலாம்?
தமிழைப் பேண வேண்டுமாயின்
தமிழ் இலக்கிய வளர்ச்சியை
பேண வேண்டுமென்மதை உணர்ந்த
புலம் பெயர் படைப்பாளிகளே
உலகெங்கும்
தமிழ் இலக்கியம் பேணும்
படைப்பாளிகள் அணியை
இனிவரும் தலைமுறைக்குள்ளே
உருவாக்கிவிட முடியாதா?
ஈழவர் அடையாளம்
ஈழத் தமிழ் இலக்கியத்தில் தான்
வெளிப்பட வேண்டுமாயின்
நாளைய
புலம் பெயர் தலைமுறைகளே
இலக்கியம் படைப்போம்
இனித் தமிழ் அழிவதைக் காப்போம்
இப்படிக்கு
தமிழைக் காதலிக்கும் ஈழவர்!

இப்பதிவு ஈழத்தில் இருந்து ஏதிலி(அகதி)யாக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களிடம் ஈழத் தமிழர் பட்ட துயரங்களை எழுதுமாறு விண்ணப்பித்தது போல உள்ளத்திலே நினைத்து எழுதினேன்.

முதலாம் பகுதிக்குச் செல்ல
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_12.html

15 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தமிழ் மொழியே தமிழரின் அடையாளம்
      தமிழ் மொழியை அழியாது பேணுவோம்
      தமிழரெனத் தலைநிமிர நடை போடுவோம்

      நீக்கு
  2. தமிழைக் காக்க விடுத்திருக்கும் வேண்டுகோள் பலனளிக்க வேண்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மொழியே தமிழரின் அடையாளம்
      தமிழ் மொழியை அழியாது பேணுவோம்
      தமிழரெனத் தலைநிமிர நடை போடுவோம்

      நீக்கு
  3. உலகில் எந்தெந்த நாடுகள்
    ஏதிலி(அகதி)யாக இருக்க
    இடம் கொடுக்குமெனக் கண்டுபிடித்தவர்கள்
    யாரென்றால்
    இனமோதல்களால் புலம் பெயர்ந்த
    இலங்கைத் தமிழர்களே!

    நெஞ்சைத் துன்புறுத்தும் வரிகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மொழியே தமிழரின் அடையாளம்
      தமிழ் மொழியை அழியாது பேணுவோம்
      தமிழரெனத் தலைநிமிர நடை போடுவோம்

      நீக்கு
  4. தமிழ் உணர்வு மறக்காமலிருக்க,,, தமிழர்கள் தமிழ் மொழியிலேயே பேசவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மொழியே தமிழரின் அடையாளம்
      தமிழ் மொழியை அழியாது பேணுவோம்
      தமிழரெனத் தலைநிமிர நடை போடுவோம்

      நீக்கு
  5. தங்களின் உண்மையான வேண்டுகோள் எல்லோர் காதிலும் ஒலிக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மொழியே தமிழரின் அடையாளம்
      தமிழ் மொழியை அழியாது பேணுவோம்
      தமிழரெனத் தலைநிமிர நடை போடுவோம்

      நீக்கு
  6. தமிழ் மொழியே தமிழரின் அடையாளம்
    தமிழ் மொழியை அழியாது பேணுவோம்
    தமிழரெனத் தலைநிமிர நடை போடுவோம்

    பதிலளிநீக்கு
  7. உலகில் எந்தெந்த நாடுகள்
    ஏதிலி(அகதி)யாக இருக்க
    இடம் கொடுக்குமெனக் கண்டுபிடித்தவர்கள்
    யாரென்றால்
    இனமோதல்களால் புலம் பெயர்ந்த
    இலங்கைத் தமிழர்களே!
    புலம் பெயர்ந்த படைப்பாளிகள்
    இருக்கும் வரை தான்
    உலகின் முலை முடுக்கெங்கிலும் இருந்தும்
    ஈழத்துத் தமிழ் இலக்கியம்
    வெளிவர வாய்ப்புண்டாம்!//

    மிகவும் வேதனையான ஆனால் உண்மையான வரிகள் நண்பரே! ஈழத்து தமிழர்களால் தமிழ் வளர்கின்றது! இனியும் காப்போம் தமிழை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் மொழியே தமிழரின் அடையாளம்
      தமிழ் மொழியை அழியாது பேணுவோம்
      தமிழரெனத் தலைநிமிர நடை போடுவோம்

      நீக்கு
  8. பதில்கள்
    1. தமிழ் மொழியே தமிழரின் அடையாளம்
      தமிழ் மொழியை அழியாது பேணுவோம்
      தமிழரெனத் தலைநிமிர நடை போடுவோம்

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!