Translate Tamil to any languages.

சனி, 24 அக்டோபர், 2026

நிறைவு தரும் வாசிப்பு, உள/மன நோய்க்கு மருந்து

 

ஏன் மாற்றார் பொத்தகத்தைப் படிக்க (வாசிக்க) வேண்டும்.

வாய்ப் பேச்சில் உறுதியான தகவல் வெளிப்படுத்துவது சிக்கல் இருக்கலாம். எழுத்துப் பிரதியில் நிதானமாக வாசகரின் எதிர்வினைக்குப் பயந்து உறுதியான தகவலை வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதால் புத்தகங்களை வாசித்தால் பயனுண்டு.

அதற்காக மாற்றார் பொத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?

ஒவ்வொருவரின் தேடலும் ஒவ்வொரு சூழலில் இருந்து தான் எழுகிறது. அதன்படிக்கு அவர்களது அறுவடைகளின் வெளிப்பாடாக ஒவ்வொரு நுட்பங்களும் தேடல்  சார்ந்த பின்புலத்தையொட்டி இருக்கக்கூடும். அதனால் மாற்றார் பொத்தகங்களில் அதாவது ஒவ்வொரு எழுத்து ஆசிரியரின் பொத்தகங்களில் ஒவ்வொரு தேடலைக் கண்டுகளிக்க முடியும்.

அறிவுப் பசி, அறிவுத் தேடல் உள்ளவருக்கு மாற்றார் பொத்தகங்களை வாசிக்க அவரவர் உள்ளம் தூண்டும். அதனால் தான் அதிகமானோர் பொத்தகங்களை வாசிக்கின்றனர். வாசிப்பு உள்ளத்தில் நிறைவைத் தரும் போது உள(மன) நோய்கள் எம்மை விட்டு ஓடிவிடும். எனவே, ஆகக் குறைந்தது ஔவையாரின் நீதி நூல்களையாவது வாசிக்க விரும்புங்கள்.


ஐப்பசி (அக்டோபர்) மாதம் வாசிப்பு மாதம் என்றவாறு வாசிப்பைத் தூண்டும் வகையில் பொத்தகக் கண்காட்சிகள் இடம்பெறுகிறது. இது தங்கள் சிந்தனைக்கு.


தலை குனிந்து
என்னை வாசித்துப் (படித்துப்) பார்
அறிவைப் பொறுக்கலாம்...
பொறுக்கிய அறிவை வைத்து
நீ
உலகெங்கும் தலை நிமிர்ந்து
நடைபோடலாம் என்கிறது
பொத்தகம்!
கல்விக்கூடம்/பள்ளிக்கூடம் போய்
படித்தவரைப் போன்றே
புத்தகம் வாசித்துப் படித்தவரும்
அறிவாளி என்கின்றனர் - எங்கட
அப்பு, ஆச்சிமார்!
வாசிப்பது - எமது
சுவாசம் போன்று எண்ணிப்பார்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!