அன்பாகப் பழகி ஏமாற்றும்
ஆள்கள் தான்! அதிகம் தான்!!
அப்படியிருக்கையில்
அன்பாகப் பழகினால் காதலிப்பது
அரை முட்டாள் செயலே!
கண்டதே கோலம் கொண்டதே காதல்
என்றலைவதும்
முழு முட்டாள் செயலே!
பொழுது போக்குவதற்கு
புத்தகங்கள், பத்திரிகைகளைப் படித்தால்
அறிவாளி ஆகலாம் - மறந்தும்
காதலிக்க முயன்றால்
தூக்குக் கயிறே துணைக்கு வரும்!
வெளித் தோற்றத்தில் மயங்கி
ஒருவரைப் பற்றிய - முழுமையான
உண்மை நிலை அறியாமல்
காதலிக்க முனைவது
சாவை நாடிச் சாவைத் தாவென்று
தலையை நீட்டியதாகவே இருக்கும்!
அ ... ஔ வரை ஆய்வு செய்து
உண்மை சொல்வாரா
பழகினால் நம்பிக்கை வருகிறதா
இறப்பு வரை துணை நிற்பரா
என்றெல்லாம் சோதித்து
ஏற்ற வாழ்க்கைத் துணை என்றறிந்தே
காதலிக்க விரும்பலாம்!
திருமணமாகிய இணையர்
இறப்பு வரை பிரியாது இருக்க
இறுக அணைத்து வைத்திருப்பது
காதல் என்ற மருந்தே!
ஆக்கம்: யாழ்ப்பாவாணன்

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!