Translate Tamil to any languages. |
வெள்ளி, 12 ஜூன், 2015
உங்களுக்கும் துளிப்பா (ஹைக்கூ) எழுத வருமே!
ஓலைக் குடிலை நாடி
ஓட்டம் பிடிப்போரைப் பாரென்று
நாற்சந்தியில்
நாலாள் பேசிக்கொள்ள
காதுக்கெட்டிய பக்கமாய்
கண்ணாலே மேய்ந்தேன்...
உண்ணான
கண்ணாளன் வீட்டை
ஆளைஆள் விலத்திக்கொண்டு
"என்னண்ணே!
சுகமாய் இருக்கிறியளே?" என்று
கேள்வி மேல் கேள்வி கேட்டு
சுகமறியும் ஆள்களைக் கண்டேன்...
கணக்கர் சித்திரபுத்திரன் கடையில
காசாளராகப் பணியாற்றும்
ஏழைக் கண்ணாளனுக்கு
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தாளில்
கோடி உரூபா பரிசு
விழுந்திருப்பதைக் கேள்விப்பட்டதும்
சுகமறியக் குழுமிய ஆள்களாம்...
காசில்லாதவர் என்று
எல்லோருமே கழித்து விட்டமையால்
ஏழைக் கண்ணாளனுக்கு
எப்பனும் எவரையும் தெரியாது தான்...
இப்ப என்னவென்றால்
வாழைக்குட்டி நல்வாய்ப்புத் தந்த
கோடி உரூபாவைக் கேள்வியுற்று
உறவு பேண வந்திட்டங்களாம்...
என்னமோ ஏதோவென்று
கண்ணாளனைக் கண்டறிய
"காசில்லையென்றதும் கழிச்சுவிட்டவங்க...
காசைக்கண்டதும் கைகுலுக்கலாமோ?
காசே தான் கடவுளடா!" என்றும்
"நேற்றோ என்னை ஒதுக்கி வைத்தவர்
இன்றோ என்னை அணைக்க வருகிறார்
கை நிறையக் காசு!" என்றும்
"நேற்றுவரை வீட்டுக்கு நாய் காவல்
இன்றிலிருந்து நம்மாளுகள் காவல்
கோடி உரூபா நல்வாய்ப்பு!" என்றும்
"நேற்றுவரை கடனிருக்கக் கனவிலே காசு
இன்றிலிருந்துக் கனவின்றித் தூக்கம் ஆச்சு
நல்வாய்ப்பாய் கோடி உரூபா!" என்றும்
துளிப்பா (கைக்கூ) வாசித்தாரே!
"காதலி! காதலித்துத் தோற்றுப் போ!
பா/கவிதை புனைய வருமாம்" என்று
நானும் பல ஊடகங்களில் படித்தேன்...
பட்ட புண்ணையும் தொட்ட துயரையும்
உள்ளத்து மாற்றங்களையும்
உணர்வோடு வெளிக்கொணர்ந்தால்
கண்ணாளனைப் போலவே
துளிப்பா (கைக்கூ) எழுத வருமே!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே!
மேலும், தகவலறிய
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?
http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_20.html
லேபிள்கள்:
5-பா புனைய விரும்புங்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
Super
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அருமை... அருமை...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அருமை ஐயா
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
துளிப் பா எழுத நீங்கள் தந்த யோசனை தூள் :)
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அருமையான பா ரசித்தேன் ஐயா! வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அருமை அருமை !
பதிலளிநீக்குமிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஹைக்கூவின் தமிழ் வடிவம் துளிப்பாவா அருமை!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம் !
பதிலளிநீக்குதோற்றுத் தோற்றுப் போனதனால்
........துயரம் கவிதை ஆகியதும்
ஆற்றுப் படுத்த ஆளின்றி
.......ஆன்மா சிலுவை சுமந்ததுவும்
காற்றுக் கூட என்கதையைத்
.......கண்ணீர் சொட்டக் கேட்டதுவும்
மாற்றம் இன்றி இன்றளவும்
.......மனதைக் குடையும் மாயங்கள் !
அழகான அர்த்தமுள்ள கவிதை வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
தமிழ்மணம் வாக்கு ஒன்று
மாற்றம் இன்றி இன்றளவும்
நீக்கு.......மனதைக் குடையும் மாயங்கள்! - அந்த
மாயங்கள் தான் எழுதத் தூண்டுகிறது - அந்த
எழுத்தில் தான் கதை, கவிதை என
எழுதுகோல் ஏந்திய வேளை தான்
வெற்றுத் தாள் நிறைய எழுத வருமே!
வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி.
அருமை நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.