பௌத்தத்தின் குறியீடு
அரச மர நிழலல்ல...
வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டு
பட்டறிவால் வெளிப்படுத்திய
சித்தார்த்தனின்(புத்தரின்) வழிகாட்டலே!
புத்தரின் வழிகாட்டலை நம்பியே
உலகத்தார் பௌத்தத்தை விரும்பினர்!
'உயிர்களிடத்தே அன்பு காட்டு'
'உயிர்களைக் கொல்லாதே'
'தவறு செய்தால் மன்னிப்பு வழங்கு'
என்றெல்லாம்
எத்தனையோ புத்தர் சொன்னாலும்
'தமிழரிடம் அன்பு காட்டாதே'
'தமிழரைக் கொல்லு'
'தமிழருக்கு மன்னிப்பு வழங்காதே'
என்றெல்லாம்
இலங்கைப் பௌத்த கோவில்களில்
பிக்குமார் சிங்களவருக்கு வழிகாட்ட
புத்தர் செந்நீர்க் கண்ணீர் வடிக்க
சிங்களவர் தமிழரை அழிக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
பிந்திக் கிடைத்த தகவலின் படி
கத்தோலிக்கக் கோவில்களை...
இஸ்லாமியக் கோவில்களை...
இந்துக் கோவில்களை...
இடித்துடைத்து
புத்தர் சிலைகளை விதைக்க
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
இறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி
அரச மர நிழற் பார்த்து இருக்கும்
பிள்ளையாரைப் பிடுங்கி எறிந்து விட்டு
அரச மரம் இருக்கும் இடமெங்கும்
புத்தரை நட்டு
பௌத்தத்தின் குறியீடு
அரச மரமெனச் சுட்டிக் காட்டி
இலங்கையில் பௌத்தம் பரவுகிறதே!
அரசமரத்துக்கு இவ்வளவு டிமான்ட் போங்க, வலி மாறும் எதிர்பார்ப்போம். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
எங்கே தங்களை பாலமகி பக்கங்களில் காணவில்லை?
நீக்குவிரைவில் வருவேன்!
நீக்குபெளதம் என்ன சொல்கிறது என தெரியாத கூட்டமாய்...பெளதம் பரப்புகிறார்கள் போலும்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
மனிதம் உணராதவர்கள் எந்த மதத்தில் இருந்து என்ன பயன்.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஇவை எல்லாம் திட்டமிட்ட செயல்... சும்மா இருக்கும் சிறுத்தையை உரசிப்பார்க்கும் வேலை...எங்கதான் முடியும் இந்த செயல்... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
புத்தரும் அப்பே ஆளுவா( எங்கன்ட ஆள்) என்று தமிழர்களும் இனி வழிபட்டால்தான் தமிழன் அந்த மண்ணில் வாழலாம் போல கிடக்கு .....
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பௌத்தம் போதித்தது வேறு...பௌத்தம் என்று சொல்லி நடக்கும் செயல்கள் அதற்கு எதிராக...அப்படிச் செய்பவர்கள் பௌத்தமதத்தவரே அல்ல..மட்டுமல்ல .மனிதம் இல்லாதவர் எந்த மதத்தினராயினும் மனிதரே அல்லர்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.