நாம் ஏன் எழுதுகிறோம்? எழுதுவதால் நாமும் களிப்ப(மகிழ்ச்சிய)டைகின்றோம். ஆயினும், எமது எழுத்து அதிக வாசகர் கண்ணில் பட்டு சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெறும் வேளை தான் உள்ளம் (மனம்) நிறைவடைகின்றது. சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெற வாசகர் களிப்ப(மகிழ்ச்சிய)டைய வேண்டுமென்பதை மறந்துவிடலாகாது. அதாவது, வாசகர் எதிர்பார்ப்பு எமது எழுத்தில் இருக்க வேண்டுமே!
வாசிப்பவரைப் படிக்காதவர் என எண்ணி எழுதுகோல் ஏந்திய சிலர் கண்டபடி கிறுக்கித் தள்ளி வாசகரிடம் சொல்லடி வேண்டிக்கட்டிய நிகழ்வுகளுக்குப் பல ஊடகங்கள் சாட்சி. எனவே, ஒவ்வொரு படைப்பாளியும் எழுதும் போது எம்மை விட வாசகர் அதிகம் படித்திருப்பார் என எண்ணிக்கொள்ள வேண்டும்.
வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கவேண்டிய உறவு நிலையைக் கடுகளவேனும் எடுத்துச் சொல்ல இங்கு முயற்சி எடுத்திருக்கிறேன். இனி வாசகருக்கும் படைப்பாளிக்கும் உதவும் வகையில் "தமிழ் மொழி மூல இணைய வெளியீடுகள்" என்ற தலைப்பில் "தமிழ் மொழி மூல வலைப்பூக்கள், வலைத்தளங்கள்" என்ற துணைத் தலைப்பில் பேணப்படும் தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.
இத்தளம் வாசகரின் அறிவுத் தேடலுக்கும் / அறிவு பசிக்கும் உதவும் என நம்புகின்றேன். அதேவேளை சிறந்த படைப்பாளிகள் தங்கள் தளங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இதில் எனது பணி என்னவென்றால், எனது பத்துப் பன்னிரண்டு தளங்களூடாக இத்தளத்தை அறிமுகம் செய்து வைப்பதாகும். எல்லோருக்கும் பயன்தரும் http://tamilsites.doomby.com/ என்ற தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.
நன்றி...
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு... வாழ்த்துகள்...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பதிந்த வைத்துள்ளேன்...தேவையான போது பார்க்க.
பதிலளிநீக்குமறுபடியும் நன்றி நன்றி...சகோதரா.
இனிய வாழ்த்துகள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பயனுள்ள பதிவு நண்பரே...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
என் வலைப் பூவையும் இணைத்து விட்டேன்,நன்றி :)
பதிலளிநீக்குநாமும் இணைத்து விட்டோம்
நீக்குமிக்க நன்றி.
இதோ வருகிறேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
நாமும்
நீக்குதங்கள் தளத்தை
இணைத்து விட்டோம்
மிக்க நன்றி.
மிக்க நன்றி ஒரு தளத்தைச் சொன்னதற்கு...நிச்சயமாகச் செல்கின்றோம்..நண்பரே!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அருமையாக இருக்கிறது நண்பரே...இதை எங்கள் தளத்திலும் பகிர்கின்றோம்....
பதிலளிநீக்குதங்கள் எண்ணம் பலருக்குப் பயன்தரும்.
நீக்குதங்கள் ஒத்துழைப்பை வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.