அவளிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவளுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை ஆண்கள் உலாவுகின்றனர்!
அவனிடம்
நான்
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சொல்ல நினைத்தாலும் கூட
அவனுக்கு முன்னாலே
சொல்ல வரமாட்டேங்குதே...
நம் முன்னே
இப்படி
எத்தனை பெண்கள் உலாவுகின்றனர்!
சொல்ல வரமாட்டேங்குதே என்ற
ஆண்களே... பெண்களே...
உங்கள் உள்ளத்திலே
காதலிக்கத் தோன்றுதே தவிர
காதல் அமையவில்லையே!
நெற்றி முட்ட நேரே
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
ஆணிடமோ பெண்ணிடமோ
சொல்லத் துணிவு வந்த நேரம் தான்
காதல் அமைந்தது (காதலாகியது) என்பேன்!
"காதல் செய்ய விரும்புகிறேன்" என்று
சும்மா கேட்டுப் பார்ப்போமென
முன் பின்
அறிமுகம் இல்லாதவரிடம் கேட்டால்
விசர்/பைத்தியம் என்ற பட்டமளிப்புத் தான்
உங்களுக்குக் கிடைக்குமென்பதை
மறந்துவிடாதீர்கள்!
Translate Tamil to any languages. |
வெள்ளி, 6 ஜூன், 2014
காதலாகும் நேரம்
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம்
பதிலளிநீக்குரசிக்கவைக்கும் வரிகள்... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
அருமை ஐயா... துணிவு என்றும் எதிலிலும் வேண்டும்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
காதல் செய்வது எப்படியென ? தங்களிடம் தனியாக மெயில் அனுப்பி கேட்டுக்கொள்ளலாமோ ? அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குKillergee
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
அனுபவித்துப் பார்த்வர்கள் ஒத்துக்கொள்ளும்படி அருமையான பதிவு.
பதிலளிநீக்குதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
நீக்குஉங்கள் யாழ்பாவாணன்.