Translate Tamil to any languages.

திங்கள், 16 ஜூன், 2014

நாங்களும் இருக்கிறோம் எல்லோ...

தெருவழியே நாங்களும் இருக்கிறோம்
வயிற்றுப் பிழைப்புக்கு
உழைக்க முடியாத ஊனங்களாக...
இளகிய நெஞ்சுக்காரர்
பழகிய முகமே இல்லாமல்
"நீங்கள் உண்டு, களித்தால் தான்
நாங்கள் மகிழ்வோம்" என்று
உதவுபவர்கள் இருக்கிறதால தான்
தெருவழியே நாங்களும் பிழைக்கிறோம்...
"தைப்பொங்கல்,
சித்திரைப் புத்தாண்டு,
தீபாவளித் திருநாள் போன்ற
நன்னாளிலாவது
எஞ்சியோர் உதவக்கூடாதா?" என்று
நாங்களும் தெருவழியே
இருக்கிறோம் எல்லோ என்று
உழைக்க முடியாத ஊனங்கள் கேட்பது
எவர் காதிலாவது விழுகிறதா?

4 கருத்துகள் :

  1. வணக்கம்

    அவர்கள் இல்லாத ஊரும்மில்லை நாடுமில்லை என்னசெய்வது காலம் செய்த விதி ஒன்றை நம்பித்தான் இன்ஒன்று வாழ முடியும் அதைப்போலதான் அவர்களும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!