Translate Tamil to any languages. |
வெள்ளி, 20 ஜூன், 2014
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?
"சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்
விக்கல் வந்தது.
அம்மா
தண்ணீரைக் குடி என்று நீட்டினாள்.
தங்கை
எங்கையண்ணே களவு எடுத்தியள் என்றாள்.
எனக்கு
எதுவும் சொல்லவோ செய்யவோ
முடியாமல் போயிற்று." என
"என் சமையலறையில்..." என்ற தலைப்பில்
எழுதினாலும் பா/கவிதை அல்ல
கட்டுரை என்றே கூறுவர்!
"அப்படியாயின்
எப்படி ஐயா
இந்தச் சமையலறை நிகழ்வை
பா/கவிதை ஆக்குவது?" என்று
என்னை
நீங்களும் கேட்பியளே!
நான், அம்மா, தங்கை என
மூன்றாள்
சாப்பிட்டது,
அம்மாவின் அன்பு,
கள்ள விக்கல் என
மூன்று செய்தி
ஆக மொத்தம் ஆறு தான்
அதையேன்
கட்டுரையாய் எழுத வேணும்?
"வேலைக்குப் போக நேரமாகுதென
வேளைக்குச் சாப்பிட எண்ணி
சாப்பிட்ட வேளை விக்கல் வர
தண்ணீரைக் குடி விக்கல் போகுமென
கண்ணீர் மல்கிய அம்மா நீட்ட
எங்கையணே களவுக்குப் போனியளென
தங்கைதான் உளவறியக் கேட்க
என்பாடு திண்டாட்டம் ஆச்சு!" என்றெழுதி
"சாப்பிடேக்க விக்கினால் கள்ள விக்கலா?" என
தலைப்பைப் போட்டால் பா/கவிதை ஆச்சே!
ஹைக்கூ யப்பானியச் சொல்
தமிழில் துளிப்பா
ஈரடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
மூன்றடிக் கவிதையே!
லிமரிக் ஆங்கிலச் சொல்
தமிழில் குறும்பா
நான்கடி எடுப்பும் ஈற்றடி முடிப்புமாக
ஐந்தடிக் கவிதையே!
மரபுக் கவிதைக்கு மட்டுமல்ல
வரிக்(வசன) கவிதை, புதுக் கவிதை போன்ற
எல்லாக் கவிதைக்கும்
இலக்கணம் இருக்கிறதே!
எண்ணியதெல்லாம் எழுதுங்கள்...
எழுதியதெல்லாம்
ஓர் இலக்கணத்திற்கு உட்பட்டே
இருக்குமென்பதை மறவாதீர்கள்!
என்றாலும் வாசிக்கச் சுவையாக
நன்றாக உலகெலாம் தமிழ் பரவ
இன்றே பாபுனைய விரும்பு!
லேபிள்கள்:
5-பா புனைய விரும்புங்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
ரசித்தேன்... சுவைத்தேன் ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நடைமுறை விசயத்தை கோர்த்து ஓர்கவிதை அருமையாக அழகாக நடந்து சென்றது.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தமிழின் சுவையே அதுதானே ...
பதிலளிநீக்குஎப்படியிருப்பினும் அங்கு இலக்கணம் இருக்கும்...
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஐயா தங்களை சுழற்சிமுறை பதிவில் இணைத்திருக்கிறேன் எனது பதிவை காண்க...
பதிலளிநீக்குநாளைக்கே அதற்கான பதிலைத் தருகின்றேன்!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/06/2.html?showComment=1403913354053#c858988773780526037
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
ஒ! கவிதை எப்படி எழுதுவதென்று ஒரு கவிதை. புதுமையான முயற்சி!
பதிலளிநீக்குநன்றி ஐயா!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
பாய்யுனையும் புதிய முயற்சி ..
பதிலளிநீக்குசிக்கலில்லாத அருமையான முயற்சி ..பாராட்டுக்கள்..
இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு
இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..
http://blogintamil.blogspot.in/2014/06/2.html
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குwww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.