Translate Tamil to any languages.

வெள்ளி, 30 மே, 2014

இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?



இலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்டிக்கொண்டு "இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானதா?" என்ற கேள்விக்குப் பதிலைத் தேடுவோம்.

ஈரேழு தீவுகளைக் கொண்டமையால் தான் ஈழம் என்ற தமிழிலக்கியப் பெயர் இலங்கைக்கு வந்தது. "இல்" என்ற வேர்த் தமிழ்ச் சொல்லில் இருந்தே இலங்கை என்ற பெயரும் ஈழத்திற்குக் கிடைத்தது. இதில் எந்த அரசியலும் இல்லை. இலக்கியப் பெயராலமைந்த தமிழரின் நாடு என்பதையே வெளிப்படுத்துகிறது.

இராமாயணம் வால்மீகி அவர்களால் பிறமொழியில் எழுதப்பட்டது. அதனைத் தமிழில் அழகாக மொழிபெயர்த்தது கம்பன். "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது கம்பனின் பாபுனையும் ஆற்றலுக்குச் சான்றாகும். அதில் இலங்கை முழுவதும் தமிழரின் நாடென்றும் இலங்கை அரசன்
இராவணன் எனும் தமிழனென்றே கூறப்படுகிறது.

தமிழரசன் இராவணன் ஆண்ட தமிழரின் நாடாம் இலங்கை மண்ணில் பௌத்தம், சிங்களம், சிங்களவர் எப்படிக் குடியமர முடிந்தது?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில், சித்தார்த்தனின் (புத்தரின்) வழிகாட்டல் வலுவானதும் சிறப்பானதும் எனக் கருதி (இன்றும் இதே நோக்கில் உலகெங்கும் பலர் புத்தரைப் பின்பற்றுகின்றனர்.) தமிழரும் இந்தியாவில் பின்பற்றத் தொடங்கினர். இந்தியாவில் புத்தரைப் பின்பற்றிய தமிழர் இலங்கைக்கும் கொண்டு சென்று பரப்பினர். இப்படித்தான் இலங்கையில் பௌத்தம் காலூன்றியது. இதன் அடிப்படையில் தமிழ்ப் பௌத்தத் துறவிகளே பௌத்ததை இலங்கையில் வளர்த்தெடுத்தனர்.

இந்தியாவில் சோழ மன்னன் ஆட்சி செய்த காலத்தில், ஆரியப் புரட்சி ஒன்று இடம் பெற்றது. அதன் பின் இந்தியாவில் பௌத்தம் பேணிய தமிழ்ப் பௌத்தத் துறவிகள் "சிங்களம் பயின்று தான் வழிபாடுகளை நிகழ்த்தலாம்" என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலை ஈழத்திற்கும் வந்து சேரச் சிங்களமும் இலங்கையில் காலூன்றியது. பின்னர் சிங்களம் பேசுவோர் சிங்களவராயினர். மேலும், தமிழர் பல்வேறு காரணங்களுக்காகச் சிங்களவராயினராம்.

இதற்கு மேலே நான் எதையும் கூறி நீட்ட விரும்பவில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால் இலங்கைச் சிங்களவரின் முதற்குடி அல்லது முதற் தலைமுறை தமிழராகவே இருக்கின்றனர். எனவே, இலங்கை "சிங்களவருடையதா? தமிழருடையதா?" என்று அலசப் பல சான்றுகளைத் தேடினாலும் இறுதியில் ஈரேழு தீவுகளாம் ஈழம் அல்லது இலங்கை தமிழருக்குச் சொந்தமானது என்று முடிவு செய்துவிடலாம்.



12 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. இலங்கையில் இன்றைய சூழல் அமைதியாகவே இருந்தாலும் தமிழர் இந்தியாவிலிருந்து வந்தவர்களென ஒதுக்கிவைக்கப்பட்ட இனமாகத் தான் பார்க்கப்படுகிறது. பண்டைத் தமிழ் வரலாற்றை மாற்றி இலங்கையின் முன்னோர்கள் சிங்களவர்கள் எனப் பார்க்கப்படுகிறது. இலங்கையின் முதற் குடி தமிழரென்பது மறைக்கப்படுவதால் இப்பதிவை எழுதினேன்.

      நீக்கு
  2. இவர் சிங்களரும் ஆதியில் தமிழரே என்கிறார்?! இப்படியே பார்த்து கொண்டு போனால் எல்லாநாடும் ஆப்பிரிக்கரு க்கே சொந்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலங்கையின் முதற் குடி தமிழரென்பது மறைக்கப்படுவதால் இப்பதிவை எழுதினேன். உண்மையில் பௌத்தம் தமிழர் காலத்தில் பரவியது. அதேவேளை சிங்களம் என்ற மொழி முதலில் இருந்திருக்கவில்லை. பின்னர் தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகள் இணைந்தே உருவானது. இலங்கை முழுவதும் தமிழர் வாழ்ந்ததைக் காட்ட இலக்கியங்கள் மட்டும் சாட்சியாகாது. 1975 காலப்பகுதியில் நான் படிக்கையில் அரச பாட நூல்களில் விஐயன் உடன் 600 உறவுகள் இந்தியாவிலிருந்து வந்ததாகவும் அவர்களே சிங்களவர் என்றும் இருந்தது. எப்படியோ இலங்கையின் முதற் குடி தமிழரே!

      நீக்கு
  3. அட போங்கப்பா ! இதே தமிழ்மணத்தில ஒரு கோடாங்கியும் நரியும் அவர்களின் கூட்டாளிகள் சிலருமா சேர்ந்து இலங்கை சிங்களவனுக்கே சொந்தம், நீங்கள் எல்லாம் சில நூறு வருசங்களுக்கு முன்னால் இங்கு வந்து குடியேறிய வந்தேறிகள், சொந்தம் எல்லாம் கொண்டாடக் கூடாது என்று நாளைக்கொரு பதிவு போட்டு உலக மக்களுக்கு விளக்கோ விளக்கென்று விளக்குகிரார்களே.... நீங்கள் அதை எல்லாம் கண்டுகொள்வதில்லையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "சிங்களத் தீவிற்கு ஒரு பாலம் அமைப்போம்." என்று ஒரு பாவலன்/கவிஞன் சொன்னது உண்மை. அதற்காகத் தமிழரின் இலங்கை சிங்களவருக்கு உரியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

      நீக்கு
  4. /"சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்." // எனப் பாரதி கூறியது. அது சிங்களவர் தீவென்பதாலல்ல! உலகிலே சிங்களவர் வாழ்ந்த ஒரே தீவென்பதால், ஒரு இடத்தில் எங்குமில்லாதது , ஒன்றிருந்தாலும், அதிகமிருந்தாலும் அது உற்று நோக்கப்படுவது இயல்பு! அதை குறிப்பாக உணர்த்துவதும் இயல்பு.
    அந்த வகையில் வேறு பாட்டை உணர்த்த நிறைய உதாரணங்கள் கூறலாம்.
    ஒற்றைப்பனையடி- அங்கு வேறு மரம் இல்லை. புளியங்கூடல்- புளியமரம் நிறைந்த இடம் .
    உலகில் எங்குமில்லா சிங்களவர் இருந்ததால் சிங்களத் தீவு, இதற்கு அரேபியர் இட்ட பெயர் சேரன்தீவு- அதை ஆங்கிலேயர் செரன்டீவ் என்றார்கள்.
    தமிழகத்துக்கு அருகில் உள்ளதால் தமிழர்கள் இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.
    ஆனால் இன்று நிலமை மாறி விட்டது.
    அதனால் யாருக்குச் சொந்தமென சிந்திப்பதிலும் உரிமையை கொடுத்து, பெற்று
    எல்லோரும் நிம்மதியாக வாழ்வதே நன்று!
    இப்போதும் "மகாவம்சத்தில்" புதிய பகுதி சேர்த்துள்ளதாகச் செய்தி வருகிறது. ஜனாதிபதி ராஜபக்ச அரசராகவும் அவர் தம்பி மந்திரியாகவும் சித்தரிக்கபட்டுள்ளாதாக
    செய்திகள் வருகின்றன.
    இன்னும் என்னென்ன எல்லாம் உண்டோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. 'It was the Sinhalese who came to the island (Sri Lanka) first but when they did, they were Tamils.' :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தங்களது
      தகுதி வாய்ந்த பதிவு
      சிறப்பு செய்துள்ளது!" என
      எனது பதிவையும்
      அறிமுகம் செய்த தங்கள் செயலை
      பாராட்டுவதோடு
      நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!