Translate Tamil to any languages.

ஞாயிறு, 11 மே, 2014

உண்மையில்...

அன்பும் காதலும்
இலவசமல்ல...
ஏற்கும் உள்ளத்தின் விருப்பமே!
பண்பும் பற்றும்
நல்லவர்களின் நடத்தை
ஆயினும்
ஏமாற்றுவோரின் மருந்தும் ஆகிறதே!
அன்பும் காதலும்
உறவை ஏற்படுத்த உதவினாலும்
பண்பும் பற்றும் தானே
உறவைப் பலப்படுத்த உதவுகிறதே!
அன்பும் காதலும் பண்பும் பற்றும்
இல்லாத உள்ளங்களால்
மனிதஉறவை
நன்றே பேண முடியுமா?

6 கருத்துகள் :

  1. வணக்கம்

    இறுதியில் சொல்லிய வரிகள் சூப்பர்..... இந்த காலத்தில் இவையெல்லாம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பு முறிவு, காதல் முறிவு, மண முறிவு (விவாகரத்து) என்பன அன்பும் காதலும் பண்பும் பற்றும் இல்லாமையே!
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. அன்பும் காதலும்
    உறவை ஏற்படுத்த உதவினாலும்
    பண்பும் பற்றும் தானே
    உறவைப் பலப்படுத்த உதவுகிறதே!

    அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் தேவை தான்...முக்கியமாக பண்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தையும் விளக்கத்தையும் ஏற்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!