தங்களால் தான்
கட்டியெழுப்ப முடியுமென
நாளுக்கொன்றாய்... ஆளுக்கொன்றாய்...
கட்சிகளும் கொடிகளும் பெருகினதே தவிர
அமைதிக்கான தீர்வு எதனையும்
எவரும் முன் வைத்ததில்லையே!
நாடாளுமன்றம் செல்லும் மட்டும்
மக்கள் நலன் பேணுவதாய் நடித்தனர்
நாடாளுமன்றுக்குள் நுழைந்ததும்
நாற்காலிகளின் நலன் பேணப் படித்தனர்
வாக்குக்கேட்ட இப்படிப்பட்டவர்
துன்புற்றுக் கண்ணீர் வடிக்கும்
மக்களைக் கண்டு கொள்ளாததால்
இலங்கை மண் அழுகிறது...!
இலங்கையில் அமைதி தோன்ற
இப்படிப்பட்ட தலைமைகளை
நம்பிப் பயனில்லையே!
நம்பிக்கையை மருந்தாகக் கொண்டு
இட, இன, மத வேறுபாடின்றியே
தேனொழுக அன்பாகப் பழகியே
மக்கள் எல்லோரும் தாமாகவே
ஒன்றிணைவதால் மட்டுமே
இலங்கை மண் அழுவதை நிறுத்தி
அமைதியை ஏற்படுத்த முடியுமே!
நாளைய தலைமுறை
மகிழ்வோடு நலமாக வாழ
நாட்டில் அமைதி தோன்ற வேணுமே!
வணக்கம்,
பதிலளிநீக்குநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
தகவலுக்கு மிக்க நன்றி.
நீக்குஇந்த அரசியல்வாதிகளே இப்படித்தான் ஏமாற்றிப்பிழைப்பார்கள்
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நாடாளுமன்றம் செல்லும் மட்டும்
பதிலளிநீக்குமக்கள் நலன் பேணுவதாய் நடித்தனர்
நாடாளுமன்றுக்குள் நுழைந்ததும்
நாற்காலிகளின் நலன் பேணப் படித்தனர்
நல்ல அழுத்தமான உண்மை பேசும் வரிகள்,
நல்ல பதிவு.
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
நீக்குஉங்கள் யாழ்பாவாணன்.