இன்றைய உலகில் இணையத் தளங்களைப் பயன்படுத்தாத எவருமே இல்லை என்றே சொல்லலாம். அதேவேளை பயனாளர்களை ஏமாற்றும் இணையத் தளங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இப்படியான சூழ்நிலையில் பயனாளர்களுக்கு பணம் தருவதாகக் கூறிப் பல இணையத் தளங்கள் விளம்பரம் செய்கின்றன. அவர்களின் செயற்பாட்டை affiliated program என்கிறார்கள். அதற்கு நாம் ஒர் இணையத் தளம் நடாத்த வேண்டுமாம். அத்தளத்தில் அவர்களது நிகழ்நிரலை (program)ச் சேர்க்க வேண்டுமாம். அதன்படிக்கு அவர்களது இணைப்பைச் சொடுக்கினால் (click); புதிய வருகையாளர் எண்ணிக்கைக்கும் புதிய கணக்கைத் திறப்போர் எண்ணிக்கைக்கும் பணம் டொலரில் வழங்கப்படும் என (google adsence, google adword உட்பட ) பல இணையத் தளங்கள் தெரிவிக்கின்றன.
நம்மாளுகள் அதிகம் இலவச இணையத் தளங்களைப் பயன்படுத்துவதால், அவற்றில் எல்லாம் இதற்கு உடன் படுவதில்லை. சில இணையத் தளங்கள் தமது தளத்தில் கணக்கைத் திறந்து வணிகம் செய்தால் தரகுப் பணம் தருவதாகக் கூறி, பதிவுக் கட்டணமாக 10-100 டொலர்கள் கறக்கிறார்கள். இப்படியான பல இணைய வணிக முறைகள் காணப்படுகின்றன. வருவாய் கிட்டுமென நம்பி, ஓய்வு நேர மேலதீக வருவாயெனப் பலர் இவ் இணைய வணிக முறைகளில் இறங்கலாம்.
நம்மாளுகள் பணத்தைக் கொட்டிப் பிச்சை எடுக்காமல் வருவாய் ஈட்டக்கூடிய இணைய வணிகம் பற்றி, இணையத்தள நுட்பவியலாளர்களே கொஞ்சம் உதவுங்களேன். சிறந்த இலவச இணையத் தள வழங்குனர்கள் (free web servers) மற்றும் பணம் வழங்கும் இணையத் தளங்கள் (affiliated program providers) விரிப்பைத் தருவதோடு, எவ்வாறு இதன்படிக்கு இணையத்திலிருந்து வருவாய் ஈட்டலாம் என்பதை விளக்குவீர்களா? இதனால், நம்மாளுகள் பிச்சை எடுக்கத்தான் முடியும் வருவாய் ஈட்ட இயலதென விளக்குவீர்களா?
என் துயரக் கதையைக் கேளுங்களேன். http://cashperclicks.tk என்ற தளத்தில் பல பணம் தரும் விளம்பரங்களை தொகுத்துப் போட்டேன். ஐம்பது டொடலர் பணம் திரண்டுவிட்டது. ஆனால், அதனை வேண்டியெடுக்க கண்டறியாத சர்வே செயற்பாட்டை நிறைவேற்றணுமாம். முக்கி முக்கிப் பார்த்தேன் முடியவில்லையே! இவ்வாறு நீங்களும் ஏமாறாதீர்கள். நானும் நம்பிக்கையான விளம்பரதாரர்களை இணைக்கலாமென http://cashperclicks.tk என்ற தளத்தைத் தொடர்ந்தும் நடாத்துகிறேன். ஏனெனில், பலர் இவ்வழிகளில் பணம் ஈட்டுகிறார்களே!
எதுவாயினும் இவற்றிற்கான விளக்கத்தைத் தங்கள் படைப்பாகத் தயாரித்து தங்கள் வலைப்பூக்களில் பதிவு செய்யுங்கள். பின், அதன் இணைப்பைப் பின்னூட்டமாக இங்கு தெரிவிக்கலாம். இது பற்றிய விளக்கம் அளிக்கும் தளங்கள் இருப்பின், அதன் இணைப்பைத் தெரிவிக்கலாம். எப்படியாயினும் நம்மாளுகள் நன்மை அடையக்கூடிய வழிகாட்டலைத் தங்களிடம் எதிர்பார்க்கின்றேன். இதில் மிகவும் முக்கியமானது, நம்மாளுகள் paypal, credit card, master card, visa card கணக்கு இலக்கத்தை வழங்கிய பின், இணைய நிறுவனங்களால் பணம் பறிக்கத் தொடங்கியதும் கண்ணீர் விடுவதைத் தடுக்கவல்ல வழிகாட்டலாக அமைய வேண்டும்.
இப்பதிவை (சிறு மாற்றங்கள் செய்யுமுன்) இணைய உலகில் என்னை அடையாளப்படுத்திய தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவு செய்த வேளை நண்பர் வினோத் - கன்னியாக்குமரி அவர்கள் தெரிவித்த கருத்தைக் கீழே இணைக்கின்றேன். நண்பர் வினோத் அவர்களும் மென்பொருள், வலைத்தள வடிவமைப்பாளர் என்ற வகையில் தனது தொழில்நுட்ப மதியுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
"பணம் சம்பாதிக்க பல வழிமுறைகள் இருக்கிறது. இணையம் வந்த பின்பு இவ்வழிகளின் எண்ணிக்கை மிக அதிகமாயுள்ளது.
ஏமாற்றுப்பேர்வழிகள் இணையம் மூலம் ஏமாற்றி பணம் சம்பாதிப்பது அவர்கள் கண்டு பிடித்த இணையம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி. பலர் இணையம் மூலம் ஏதாவது பெயர் சொல்லி "Donation" வாங்குகிறார்கள். பலர் சுனாமி வந்த போது தொண்டு நிறுவனங்களுக்கு இணையம் மூலம் வந்த காசுகள் ஏராளம். நியாயமாக சம்பாதிக்க வேண்டுமென்றாலும் இணையம் கைகொடுக்கும்.
சாதாரணமாகக் கடை வைத்திருப்போர்கள் இணையத்தில் கடை விரித்தால் இணையம் மூலம் வாங்குவோர்களையும் கவர முடியும். இதற்கு இணைய வணிகம் (E-Commerce) இணைய வசதிகள் மூலம் செய்யலாம். அல்லது ebay தளம் மூலம் செய்யலாம். ஆனால் நம்மிடம் விற்க ஏதாவது இருக்க வேண்டும்.
வேலை செய்யத்திறமை இருந்தால் இணையத்தில் வேலை செய்துகொடுத்து சம்பளம் வாங்கலாம். உதாணமாக தட்டச்சு போன்ற வேலைகள். ஆனால் இதில் பலர் ஏமாற்றுப்பேர்வழிகளே. வேலை செய்து கொடுத்த பின் காசு வராது. ஏதாவது பிழை சொல்வார்கள்.
ஆனால் அமேசான் தளம் http://www.mturk.com/mturk/welcome பல வேலைவாய்ப்புகளைக் கொடுக்கிறது.
கணினி மென்பொருள் அல்லது இணைய தள வடிவமைப்பு வேலைகள் என்றால் elance.com, odesk.com, freelancer.com போன்ற தளங்களில் பார்க்கலாம். அடுத்து பங்கு சந்தையில் பணம் போட்டு எடுத்தல். இது பற்றி எனக்கு அவ்வளவாக அறிவு இல்லை. மற்றுமொரு முக்கியமான வழிமுறை விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது.
நம் வலைத் தளத்தில் கூகிள் போன்ற பிரபல விளம்பர கம்பனிகளின் விளம்பர நிரலை இணைத்துவிட்டால் அவை நம் வலையின் பயனாளர்களுக்கு விளம்பரங்களைக்காட்டும். அதை எத்தனை பேர் கிளிக்குகிறார்கள் என்பதைப்பொறுத்து நமக்கு காசு கிடைக்கும். நிறைய பேர் வந்து படிக்கும் வலை தளமாக இருந்தால் தான் இதனால் பலன் கிடைக்கும். மேலும் தகவலுக்கு google.com/adsense. மேலும் பல வழிகள் இருக்கலாம்." என நண்பர் வினோத் - கன்னியாகுமரி அவர்கள் தங்கள் மதியுரையைப் பகிர்ந்தார்.
Translate Tamil to any languages. |
திங்கள், 26 மே, 2014
அள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா?
லேபிள்கள்:
2-கதை - கட்டுஉரை
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
சிலருக்கு உதவலாம் ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
#நம் வலைத் தளத்தில் கூகிள் போன்ற பிரபல விளம்பர கம்பனிகளின் விளம்பர நிரலை இணைத்துவிட்டால் #
பதிலளிநீக்குதமிழ் வலைத் தளங்களுக்கு கூகுள்விளம்பரம் தருவதில்லை !
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.