காஞ்சிபுரம் ஓரிக்கையூர் செங்கொடியே!
மூன்றுயிரைத் தூக்கிலிடாதே என்று
உன்னுயிரை முடிக்க
எப்படியம்மா துணிவு வந்தது?
அம்மா! தாயே!
உன்னிழப்பு எங்களை வருத்தலாம்
ஒருபோதும்
பதவிக்காரரின் உள்ளத்தில் மாற்றம் தராதே!
தன்னை ஒறுத்தல்(அகிம்சை)
மகாத்மா காந்தியொடு பறந்து போனபின்
சாவுக்கும் பெறுமதி இழந்து போயிற்று!
சாவாலே செய்தியைத்தான் பரப்பலாம்
தீர்வைப் பெறமுடியாதே...
வாழ்ந்து கொண்டு
அன்னா ஹசாராவைப் போல
வென்று காட்டலாமே!
இன்றைய தமிழருக்குத் தேவை
உயிரிழப்பல்ல...
தமிழரெனத் தலைநிமிர்ந்து வாழ
தமிழை அழியாமல் பேண
உயிர்களைப் படைத்துப் பெருக்குவதே!
செங்கொடியின் சாவொடு
தமிழினமே சாவை நிறுத்து!
ஒருவரது உயிரிழப்பை விட
உலகெங்கும் தமிழர்
தெருவில் இறங்கி முழங்குவதே
சரியான வழி...
அந்த நாள் எந்த நாளோ
அதுவே
செங்கொடிக்கு நாம் செய்யும் அஞ்சலி!
செங்கொடிக்கு நல்லதோர் வீர வணக்கம் !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.