Translate Tamil to any languages.

செவ்வாய், 20 மே, 2014

பாவலனும் கண்ணாடியும்


திருநீற்றுக் கீறுகள்
சந்தன, குங்குமப் பொட்டுகள்
சிவப்பு, வெள்ளைப் பூசல் மாக்கள்
கரிப்பொட்டு, ஒட்டுப்பொட்டு என்பன
ஒட்டி, அப்பி, பூசி, மெழுகி இருந்தும்
மூக்கை அரிக்கும் மணம் கொண்ட
எண்ணெய், தண்ணி தெளித்து
ஆணும் பெண்ணும்
அழகு பார்க்கும் வேளை
முகம் பார்க்க உதவும் கண்ணாடியே
உனக்குள் என்ன தோன்றும்
எனக்கும் சொல்லித் தந்தால்
என் பாட்டில் வடிப்பேனே!

பச்சைத் தண்ணீர் பட்டால்
உடம்பு தேயும் என்போர்
உடுப்புத் துவைத்தால்
கிழிந்து போகும் என்போர்
குளிப்பு, முழுக்கு இன்றி
நாறும் பொன் மேனிக்கு
செயற்கை அழகு பூசுவோர்
தான் வெறுக்கும் தன் கறுப்பை
மூடி மறைக்க முனைவோர்
உள்ளத்தில் ஊறும் காதல் உணர்வால்
இத்தனை முகங்களையும் கடந்து
எத்தனை, எத்தனை முகங்கள்
தம்மை நோக்கி நாடுமென
அழகு சேர்க்கும் செலவாளிகள்
எல்லோரும் என்னைப் பார்க்கையில்
அவரவர் முகவரிகளை
அச்சொட்டாக அப்படியே கூறும்
என் பணியை - பாவலனே
உன் பாட்டில் வடிக்க
உன்னாலே முடியாதென்றது
முகம் பார்க்க உதவும் கண்ணாடி!

6 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் மதிப்பீட்டுக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் மதிப்பீட்டுக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. அருமை ஐயா... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மதிப்பீட்டுக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!