Translate Tamil to any languages.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

சின்னதாகச் சித்தித்துப் பாருங்களேன்



முறையான திட்டம் (Master Plan)

புத்தாண்டு பிறந்ததும் என்ன பண்ணப் போறாய்?
     
                 பட்ட கடன்களை அழிக்கப் போறேன்.
எப்படித் தோழி?

                 என்ர பெயரை மாற்றித் தான்!
                (அப்ப கடன்கொடுத்தோர்
                என்னைக் கேட்க முடியாதே!)


பொங்கல் பொங்கலையோ?

முகத்தார்: தைப்பொங்கல் என்ன மாதிரி?

சிவத்தார்: அந்த மாதிரி!

முகத்தார்: எந்த மாதிரி?

சிவத்தார்: தண்டின பொங்கல் நிறையக் கிடைக்குமே!


நரி மூளை (ஓர் எச்சரிக்கைக்காக)

செம்பு: யாழில் எரிபொருள் தட்டுப்பாடு, ஒரு களஞ்சியத்திலும் இல்லை. உனக்கெப்படிக் கிடைக்கிறது?

வம்பு: பெரும் புள்ளிகளின்ர உந்துருளியால குடுவையில (போத்தலில) ஏந்தி வந்து, என்னுடைய உந்துருளிக்கு விடுறன்.

செம்பு: பல நாள் கள்ளர் ஒரு நாள் பிடிபடுவினமாம்.

வம்பு: சில நாள் எரிபொருள் தடை, சிக்க வைக்காதே!


வணிக மூளை

முகத்தார்: தெருவெங்கும் மக்கள் வெள்ளம், அவர்களோடு உடைந்த ஊர்திகளும் கூட...

சிவத்தார்: அமெரிக்க-ஈரான் முறுகலை வைத்து, மக்களைத் தெருவில வறுத்தெடுக்கிறாங்களே!

முகத்தார்: தட்டுப்பாடா - அது
                      வெறும் கட்டுக்கதை!
                      முதலாளி பணமீட்ட
                      ஏமாளி மக்களுக்கோ
                      பணச் செலவு!

2 கருத்துகள் :

  1. அருமை ... !!! இனி பெட்ரோலை நம்பி பயனில்லை. மின்கலம் மூலம் இயங்கும் உந்துருளிக்கு மாறிவிட வேண்டியதுதான் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!