அழகிருக்கவே தான்அலைபவர்
கவர்ந்திழுக்கவே தான்அலைபவர்
தொழிலிருக்கவே தான்அலைபவர்
பணமிருக்கவே தான்அலைபவர்
காதலின்றியே
அலையும் ஆள்இவர் உருப்படார்
எனத்தான் கன்னிப் பெண்களும் ஒதுங்குவரே!
(குறளடி வஞ்சிப்பா)
அறிவிருக்கென அழகிருக்கென நெருங்குவதுமே
மிடுக்கிருக்கென எடுப்பிருக்கென நெருங்குவதுமே
வருவாய்த்தொழில் வளமிருக்கென நெருங்குவதுமே
காதலின்றியே
அலையும் ஆள்இவர் சரிவரார்
எனவெண் ணித்தான் ஆண்களும் ஒதுங்குவரே!
(சிந்தடி வஞ்சிப்பா)
தெருச்சுற்றியை உளமாற்றியே
குடிகாரரை உளமாற்றியே
விலைப்பெண்களை உளமாற்றியே
தன்நலத்தவர் உளமாறவே
வழிகாட்டினால்
நல்லொழுக் கமானவர் மலரவே
நாடுமுன் னேறவும் உழைப்பாய் நீயே!
(குறளடி வஞ்சிப்பா)
மாற்றாருமே உளநிறைவுடன் வாழ்ந்திடவென
ஆற்றுகையென அறிவுரையென உரைத்துதவுதல்
மாற்றாரெவர் மகிழ்வாகவே ஏற்றம்பெற
வழிகாட்டியாய்
நீவழி காட்டின் பாரெவர்
முன்னேற் றம்தான் நாடுமுன் னேறவே!
(சிந்தடி வஞ்சிப்பா)
அருமை ஐயா...
பதிலளிநீக்கு"காதலேன் வரவில்லை?"
பதிலளிநீக்குவளம் பார்த்து வலம் வரும் காதலர்களுக்கு சரியான சவுக்கடி ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<