குழந்தையின் தமிழறிவும் பாவண்ணமும்
என் பா/ கவிதை நடை
இலக்கியம்
என்றுரைப்போர்
இலக்கு
+ இயம்புதல் என்றிவார்!
அது போலத்
தான் - எனது
எண்ணங்களைப்
பகிரும் வேளை
என் கைவண்ணங்களில்
குறும் செய்தியைக்
கலந்திருப்பேன்!
கைக்கெட்டிய
சொல்லும்
உள்ளம் தொட்ட
செய்தியும்
கைவண்ணங்களைக்
காட்டும் வேளை
கையாள முனைகின்றேன்
- அதில்
மூ.மேத்தாவின்
அமைப்பும் மின்னலாம்...
என்னுள்ளம்
தொட்ட பாவரிகளைப் போல
எத்தனையோ
பாவரிகளும் மின்னலாம்...
பாவரசர்
கண்ணதாசனைப் போல
பட்டறிந்ததில்
சுட்டுணர்ந்ததைச் சொல்லத் தான்
சொல்ல முயன்று
தோற்றுப் போகின்றேன் - அதுவே
என் பா/
கவிதை நடை என்பேன்!
எது மெய்யாம்?
கற்பனையும்
பொய்யாம்
கவிதையும்
பொய்யாம்
கவிஞரும்
பொய்யாம்
சிலருக்கு
அப்படி
எனக்கு அப்படியல்ல...
ஒவ்வொரு
கவிதையிலும்
ஒவ்வொரு
உண்மை
ஒளிந்திருக்கும்
- அது
கண்ணில்
பட்டதும் - அதுவே
கவிதையென
உணருகிறேன்!
அழகாக அச்சடித்து
இருப்பினும்
விரும்பியோர்
நாடி வாசித்தாலும்
கவிதைக்குப்
பொய் அழகாயினும்
ஒளிந்திருக்கும்
உண்மையே
கவிதைக்கு
உயிர் என்பேன்!
வாசகரிடம் ஒரு கேள்வி!
கவிதை ஒன்றில்
கவிஞரின்
பார்வை இருக்கும்...
கவிதையைப்
படித்தவர் உள்ளத்தில்
கவிஞர் சொல்லிய
செய்தி இருக்கும்!
அப்படித்
தான்
"ஏழை
விதைத்த நெல் முளைத்து
கதிர் தள்ளும்
வேளை
மழை வந்து
வெள்ளம் முட்டி
வயலில் தேங்கி
நிறைய
நெற்பயிருக்கு
மேலே - அது
சாணேறி முழமுயர
நிற்கிறதே! - அதை
பார்த்துக்
கொண்டு இருக்கும்
கடவுளுக்கோ
ஏழையின்
துயர் புரியுமோ?" என
பாப்புனைவதில்
அரைவேக்காடு
நானும் கிறுக்கி
இருக்கிறேன்!
நான் கிறுக்கியது
கவிதையா
நானும் கவிஞரா
- அதை
நீங்களே
சான்றுப்படுத்தலாமே!
யாப்பில் ஆறு உண்டாம்!
எழுத்துகள்
அத்தனையும் ஆங்காங்கே
எழுதும்
வேளை ஒழுங்கில் வர
அசைந்து
அசைந்து அசை வர
சீராகச்
சீரமையத் தளை தட்டாதே!
சீர்களைத்
தளை தட்டாது இணைக்க
அடி, தொடை
துணைக்கு வந்திணைய
யாப்பமையப்
பாபுனைய என்றும் மகிழ்ச்சியே!
யாப்பறிந்து
பாப்புனைந்தால்
நல்ல பாவலராகலாம்
என்றுரைப்பர் - அந்த
யாப்பில்
ஆறு உறுப்புகளாக உலாவும்
எழுத்து,
அசை, சீர், தளை, அடி, தொடை என
கற்றுப்
பாப்புனைந்தாவது - நான்
பாவலராக
முயலும் பணி செய்கிறேன்!
நான்
பாவலரா?
இல்லையா? - அதை
என் வாசகர்களே
பரப்புவார்!
பதிலென்ன சொல்லு!
சிந்தித்துச்
சிந்தித்து
வாழ்நாள்களைக்
கரைப்பது வீணே!
சிந்தித்துப்
பார்த்தால் - எள்ளளவேனும்
முடிவு கிட்ட
வேணும் உறவுகளே!
நல்ல முடிவு
கிட்டினால் தான்
நாமும் வாழ்வைச்
சுவைக்கலாம் பாரும்!
சும்மா காலம்
கடத்தி
வாழ்வை வீணடிப்பதில்
பயனேதும்
கிட்டாது உறவுகளே!
"காலம்
கடந்து அறிவு (ஞானம்) வந்து
என்ன பயன்?"
என்று கேட்டால்
நீங்கள்
கூறும் பதிலென்ன?
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!