Translate Tamil to any languages.

ஞாயிறு, 1 ஜூலை, 2018

நல்லவரும் கெட்டவரும்



முதன் முதலில் - நாம் 
எங்கே தவறு செய்கின்றோம்?
அலசிப் பார்த்தீர்களா?
  - அது தான்
மாற்றாரோடு உறவு வைக்கும் போது தான்!

வெளுத்ததெல்லாம் வெள்ளை போல
பார்த்த எல்லோரும் நல்லவரென
பழகிய உறவுகளில் கெட்டவர் எத்தனை ஆள்?
அத்தனை கெட்டவரோடும் உறவைப் பேணுவதே
நாம்
 
முதன் முதலில் விட்ட தவறு என்பேன்!

"என்னண்ணே!
இப்படிச் சொல்லிப் போட்டியள்!
நல்லவர் போல நடிப்பவரும் உண்டு.
நல்லவராகவே வாழ்வோரும்
  உண்டு.
இவர்களுக்குள்ளே
கெட்டவரை எவரென்று கண்டுபிடிப்பது?
இப்படிக் கேட்கின்ற
தம்பி, தங்கைகள் இருக்கக் கூடும்!

அடே! சின்னப்பொடியா!
உன்ர பேச்சுச் செல்லாக் காசடா!
நடுத் தெருவில விழுந்து விட்ட வேளை
நல்லவரையும் கெட்டவரையும் - நாம்
கண்டுபிடிப்போமடா? - அதற்காக
தெருத் தெருவாக விழுந்து நொருங்கிச் சாகலாமோ?
இப்படிக் கேட்கின்ற
அண்ணன்மாரும் அக்காமாரும் இருக்கக் கூடும்!

எமது
சொல், செயல், பாவனைகளைக் கண்டு
பிழை சுட்டுவோர் எல்லோரும்
கெட்டவர்கள் தான் உறவுகளே!
பிழையைச் சுட்டிச் சரியானதைக் காட்டி
வழிகாட்டும் அறிவாளிகள் தான்
நாம் தேடவேண்டிய நல்லவர்கள் என்பேன்!

ஒரு குற்றிக் காசின்
பக்கங்கள் இரண்டையும் போலவே
நல்லதும் கெட்டதும்
நம் வாழ்வில் இருக்கக் கூடும் உறவுகளே!
எங்கள் கெட்டதை எடை போடுவோர்
எல்லோரும் கெட்டவர்கள் தான் உறவுகளே!
நமது நல்லது எல்லாவற்றையும்
பொறுக்கித் தூக்கிக் காட்டித் திரிந்து
இலைமறை காய்களைக் காட்டுவது போல
மக்கள் முன் வைக்கும் அறிஞர்களே
நாம் தேடவேண்டிய நல்லவர்கள் என்பேன்!

மொத்தத்தில முழுமையாக அலசினால்
நமக்கோ நம்மைச் சூழவுள்ளோருக்கோ
பயன்தரும் - தமது
சொல், செயல், பாவனைகளைக் காட்டும்
 
உயர்ந்த மனிதர்களே நல்லவர்கள் என்பேன்!
எஞ்சிய எல்லோருமே
  - எமக்கு
எப்போதும் கெட்டவர்களாக இருக்கக் கூடும்!

உறவுகளே! உறவுகளே!
சின்னப் பொடியன் நானென்றாலும்
சொல்லக் கூடியது ஒன்றுண்டு! - அது
நல்லவரும் கெட்டவரும் நம்மை நாடுவதில்லையே!
சாவுற்றாலும் நாலு தோள் தேவையென
நாம் தான்
 
தேடிச் சென்று உறவு வைத்த பின்
கடைசியிலே கெட்டவரெனக் கழித்து விடலாமோ?
கெட்டவரையும் நல்லவராக்க முயன்றிடு - அப்ப தான்
எம்மையும் நாலாள் நல்லவரெனச் சொல்வார்கள்!

எனது மாறுபட்ட பதிவுகளைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 1

சனியன் பிடிச்சுப் போட்டுது! - 2

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!