இலக்கியத்தைப் படிக்காதவர், படித்தவர் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும்
கொண்டு செல்லவல்லது பட்டிமன்றங்கள் என்பார்கள். அதற்குமப்பால் திண்டுக்கல் ஐ.லியோனி
அவர்களின் பாட்டுமன்றங்கள் உதவுமாம். இன்னும் ஏதாச்சும் புதிய கண்டுபிடிப்புகள் இருந்தால்
பகிருங்கள்.
பட்டிமன்றங்களா பாட்டுமன்றங்களா தமிழை வாழ வைக்கப்போகின்றன?
என்றால்
"பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது" என்கிறார்
பாவலரேறு பெரும்சித்திரனார் ஐயா!
இலக்கியத்தை எல்லோருக்கும் கொண்டு செல்லவல்ல ஊடகமாக எதனைக் குறிப்பிடலாம்?
என்றால் வாசகர், கேட்போர், பார்ப்போர் உள்ளம் நிறைவைத் தரவல்ல எதனையும் குறிப்பிடலாம்.
அதனை அறிந்து திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் பட்டிமன்றங்கள் மக்கள் முன் விரும்பும்
ஒன்றாகலாம். ஆனால், இலக்கியத்தை எல்லோருக்கும் கொண்டு செல்லும் என்றால் ஐயமே!
அருமையான வாழ்வின் அத்தனை மணித்துளிகளுமே இலக்கியம் தான். வாழ்வின்
சில மணித்துளிகளைக் காட்டும் நாடகமும் திரைப்படமும் இலக்கியத்தை எல்லோருக்கும் கொண்டு
செல்லாதா? அருமையான வாழ்வையே வெளிப்படுத்தும் தொடர்கதை (நாவல்) இலக்கியத்தை எல்லோருக்கும்
கொண்டு செல்லாதா? அரங்கில் கைதட்டலும் மகிழ்வூட்டலும் பொழுதுபோக்கும் தரும் என்ற நோக்கிலேயே
பட்டிமன்றங்கள், பாட்டுமன்றங்கள், ஏனையவை அமைகின்றன.
இன்றைய கேள்வி?
பட்டிமன்றங்களா பாட்டுமன்றங்களா மக்களைக் கவருகிறது?
நீங்கள் இலகுவாகப் பதிலளிக்க ஒவ்வொரு இணைப்பைப் பகிருகிறேன்.
இந்தப் பட்டிமன்றம் மக்களிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்கிறதா?
இந்தப் பாட்டுமன்றம் மக்களிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்கிறதா?
இல்லையெனில், மக்களிடம் இலக்கியத்தைக் கொண்டு செல்ல எது உதவும்?
அதனைக் கண்டுபிடித்தால் தான் தமிழை மக்கள் உள்ளத்தில் (மனத்தில்) வாழவைக்க முயலலாம்.
மக்கள் உள்ளத்தில் (மனத்தில்) தமிழ் வாழ்ந்தால் தான் தமிழை இனி மெல்லச் சாகாமல் பேணலாம்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!