Translate Tamil to any languages.

ஞாயிறு, 7 மே, 2017

உறவுகளே! இறுதி நாள் நெருங்கி வருகிறதே!

"வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்." என்றவாறு

"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html " என்ற பதிவில் தெரிவிக்கப்பட்டது. பின்னர்
"கால நீடிப்பு - மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/05/2017.html " என்ற பதிவில்

May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள் பதிவுகளை அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 
(படம் கூகிளில் பொறுக்கியது)

சிறப்பாகத் தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு எனப் பத்துப் பதிவுகள் வந்து சேர்ந்துவிட்டன. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைப் படிக்கலாம். அவற்றைப் படித்து உங்கள் கருத்துகளை வெளியிடலாம்.

உறவுகளே! உங்கள் பதிவுகளை அனுப்புவதற்கான இறுதி நாள் நெருங்கி வருகிறதே! அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும். சிறந்த பதிவுகளை நடுவர்களே தெரிவு செய்வர்.
" https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html " என்ற இணைப்பைச் சொடுக்கி அப்பதிவில் குறிப்பிட்டவாறு உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.

வாசிப்பு மாதத்தை ஒட்டி நடாத்தப்படும் எமது "வாசிப்புப் போட்டி - 2017" இற்கு முன்னதாக இம்மின்நூல் வெளியிடப்பட்டு உலகங்கும் பகிரவுள்ளோம்.



சித்திரைப் புத்தாண்டு - கவிதைப் போட்டியில் பங்கெடுத்தாச்சா?

சமகாலச் சூழலை வைத்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி கவிதைப் போட்டி நடாத்துவதாக அறிவித்திருந்தது.

"என்னடி - உன்ர ஆள்
முற்றத்தில தட்டுக் காய விடுறாரு?"
"அவருக்குக் கறி சரியில்லையாமடி
வெயிலில தட்டுக் காய்ந்ததும்
முட்டை பொரிக்கப் போறாராமடி"
சித்திரை வெயில் வாட்டுது
பொண்ணுகள் இப்படிப் பேசுறாங்க!

என்றவாறு சமகாலச் சூழலை வைத்து நிறையக் கவிதை எழுதலாம். போட்டி இறுதி நாள் 10/05/2017. ஆமாம், உறவுகளே! உங்கள் கவிதைகளை அனுப்புவதற்கான இறுதி நாள் நெருங்கி வருகிறதே! இன்னும் பங்கெடுக்காதோர் இன்றே பங்கெடுக்க வாருங்கள்.
இப்பவே கிழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் போட்டி ஒழுங்கு முறைகளை படித்த பின், உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாமே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!