நானும்
பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம்
என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
தொழிலின்றி
வருவாயின்றி
நானும் - அடிக்கடி
பிச்சைக்காரன்
ஆகின்றேன்!
நானும்
பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம்
என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
நானும் - அடிக்கடி
தோல்விகளையே
சந்திக்கின்றேன்
கையூட்டு
(இலஞ்சம்) வழங்கக் கூட
நாலு
பணம் கையில் இல்லாமையாலே!
நானும்
பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம்
என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
என்னை
நாடி வந்த பணமோ
எப்பவும்
- அடுத்தவர்
கையைத்
தானே காதலிக்கிறது!
நானும்
பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம்
என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
பணம்
உள்ள வேளை
காதலிப்பதாக
ஆயிரம் பெண்ணுங்க
எனது
நிழலாகத் தொடர்ந்தாங்க...
பணம்
இல்லாத வேளை
அன்பாய்ப்
பழகத் தானும்
நல்ல
நண்பரும் இல்லையே!
நானும்
பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம்
என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
நானும் - அடிக்கடி
ஊருக்க
தலைவராக இருந்தேன்!
பணம்
இல்லை என்றதும்
தொண்டராகக்
கூட - எவரும்
என்னைச்
சேர்க்கிறாங்க இல்லையே!
நானும்
பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம்
என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
பணம்
உள்ள வரை
என்னைப்
பற்றிய உறவுகள்
பணம்
இல்லாத போது
என்னை
விட்டுப் பறக்கிற உறவுகள்
ஆச்சே!
ஆச்சே!
நானும்
பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம்
என்னை வெறுக்கிறதே!
எப்படியோ,
அத்தி
பூத்தாற் போல - என்னை
நாடி
வரும் பணம் தான்
என்னை
வாழ வைக்கிறதே!
ஏனென்றால்
- அதுவும்
நாலு
பணம் சேமிப்பில
நான்
போட்டு வைச்சதாலே!
அத்தி
- 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!