Translate Tamil to any languages.

வெள்ளி, 12 மே, 2017

இலங்கையில் "கன்னியா வெந்நீர் ஊற்று" பௌத்த உடமையா?

என் அறிவிற்கு எட்டிய அளவில் இராவணன் (இலங்கையை ஆண்ட தமிழரசன்) சிறந்த தாய் பற்றாளன். அவர் பண்டாரவளை சென்ற வேளை 'அல்ல' என்ற பகுதியில் தாய் குளிக்கத் தண்ணீர் இல்லை என்றதும் அங்குள்ள மலையைத் தனது வாளால் வெட்டி நீர் வீழ்ச்சியைப் பெற்றார். அவ்விடத்தை 'இராவணன் வெட்டு' என்கின்றனர்.


தலைநகரமான திருகோணமலையில இறந்த தனது தாயாரின் 31ஆவது நாள் சமய நிகழ்வுகளைச் செய்வதற்காக நீரைப் பெற இராவணன் தனது வாள் முனையால் ஏழு இடத்தில் குற்றினாராம். அவ்வேழும் வெவ்வேறு சூட்டு அளவில் வெந்நீர் ஊற்றாக அமைந்தது. அதுவே 'கன்னியா வெந்நீர் ஊற்று' எனப் பேசப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்துக்கள் இறந்தவர்களின் 31ஆம் நாள் சமய நிகழ்வுகளை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் நிறைவேற்றி வந்தனர்.

இலங்கையில் 1944 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 'பட்டிப்பளை' என்ற ஊரில் இருந்த தமிழரை வெளியேற்றினர். அவ்விடத்தில் சிங்கள மக்களைக் குடியேற்றிய பின் 'கல்லோயா' என அவ்விடத்திற்குப் பெயரையும் வைத்தனர். அதே சிங்கள ஆட்சியாளர்களே, 2017 இல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 'கன்னியா வெந்நீர் ஊற்று' என்ற பகுதியை சிங்கள இடமாக மாற்ற முயலுகின்றனர்.


"பௌத்தமயமாகும் கன்னியா வெந்நீர் ஊற்று" என்ற செய்தியைக் கீழ்வரும் இணைப்பில் படித்தேன். அவர்களது ஒளிஒலி (Video) இணைப்பையே மேலே பகிர்ந்துள்ளேன்.

மேற்படி செய்தியைப் படித்ததும் நான் கிறுக்கிய வரிகளைக் கீழே தந்துள்ளேன்.
தமிழா! கன்னியா போவது
சிங்களவர் கையுக்கா - அப்ப
தமிழன் வீழ்வது கடலிலா?
கந்தளாய்க் குளம் கட்டியது
குளக்கோட்ட மன்னன் - அதனை
பொறித்திருந்த குளக்கட்டுக் கல்லையே
பிடுங்கி எடுத்திட்டாங்க...
கன்னியாவில முட்டை அவித்து
அதன் செயலைத் தணித்தான்
சுற்றுலாப்பயணி (வெள்ளைக்காரன்)
கன்னியா ஊற்று தங்கடயென
சிங்களவரும் முழங்க வந்திட்டாங்க...
இனியும்
தமிழர் இடங்கள் பறிபோவதா?
ஈற்றில்
தமிழர் வீழ்வது கடலிலா?

இதற்கெல்லாம் அவர்களது (http://www.trincoinfo.com/2017/05/blog-post_86.html) ஒளிஒலி (Video) இணைப்பில் சுவிற்சலாந்து அரசியல் கட்டமைப்பையே இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வாக முன்வைக்கின்றனர். இதனை நானும் வரவேற்கிறேன். கீழ்வரும் இணைப்பில் எனது தீர்வையும் முன்வைத்துள்ளேன்.
ஐக்கிய இலங்கையைப் பேணும் பணி (United Sri Lanka Care Duty)

உலகம் அமைதி பேணினால்
ஐ.நா. தூங்கி விட்டால்
இலங்கைத் தமிழர் இடங்கள் பறிபோக
இலங்கைத் தமிழர் கடலில் வீழ்வதா?
உலகம் அமைதி பேணாது
ஐ.நா. விழித்து எழுந்து
இலங்கைத் தமிழர் இடங்கள் பறிபோவதை
தடுத்து நிறுத்தா விட்டால்
இலங்கைத் தமிழர்
கடலில் வீழ்வதைத் தவிர
வேறு வழியுமுண்டோ?

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!