Translate Tamil to any languages.

சனி, 2 ஜூலை, 2016

ஒளிந்திருக்கும் ஒளிஒலிப் (Video) படக்கருவியில்...

கீழுள்ள ஒளிஒலி (Video) படத்தைச் சொடுக்கிப் பார்க்க.


இவ் ஒளிஒலி (Video) இணைப்பிற்கான உண்மையான முகநூல் இணைப்புக் கீழே தரப்படுகின்றது.


முகநூலில் கனடாவாழ் தோழி காவியகவி (http://kaviyakavi.blogspot.com/) இனியா அவர்கள் இதனைப் பகிர்ந்தமையால் (அவரது பதிவை நானும் முகநூலில் பகிர்ந்தேன்) இவ் இணைப்பை என்னால் பெறமுடிந்தது. தோழி இனியா அவர்களுக்கு நன்றி.


ஒளிஒலிப் (Video) படம் பார்த்தீர்களா?
தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பாடு
சொல்லும் செய்தி என்ன?

இன்றைய இளசுகளில் - அன்றைய
தமிழர் பண்பாட்டைப் பேணாத
ஆடைகளின் அணிவகுப்பைக் கண்ட
ஒளிஒலிப் (Video) படம் பிடிப்போர்
தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்கி
எப்படி எல்லாம்
தங்கள் நுட்பங்களைக் கையாளுகிறார்கள்!

பெண்களே, உங்கள் கண்களால் காணும்
தமிழர் பண்பாட்டை மீறும் கோலங்களை
ஒளிஒலிப் (Video) படம் பிடிப்போர்
ஒளிஒலிப் (Video) படக்கருவிகளில்
உங்களை அறியாமலே பிடிச்சிடுவாங்களே!

உங்களுக்குத் தெரியுமா? - இன்றெல்லாம்
வலை ஊடகங்கள் வழியே உலாவும்
ஒளிஒலிப் (Video) படங்கள் எத்தனை? - அ தனை
நானும் கண்ணுற்று அதிர்ந்து போக - அதை
உங்கள் உள்ளத்தில் உறைக்கவே பகிருகிறேன்...

சிந்திக்க வைக்க அகப்பட்ட - ஓர்
ஒளிஒலிப் (Video) படத்தைப் பகிர்ந்ததே
நாளை நாம் நம்மை இழக்காது
செயலாற்ற வழிகாட்டும் பதிவென்றே!
ஏனெனில்,
என் இல்லாளைப் படம் பிடிப்போர்
உங்கள் காதலியையோ இல்லாளையோ
ஏன்
உங்கள் பெண் பிள்ளைகளையோ
எள்ளளவேனும் உங்களுக்குத் தெரியாமலேயே
ஒளிஒலிப் (Video) படம் பிடிப்பார்களே - அதை
எத்தனையோ வழிகளில் கேவலப்படுத்தி,
தங்கள் வணிகம் ஆக்கி - அங்கால
என் எழுதுகோல் எழுத மறுக்கிறதே!
ஓ! தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட
எழுத மறுக்கும் எழுதுகோலைப் போல
எங்கள் வாய்களும் திறக்க மறுக்கலாம்
எதற்கும் நாம் விழிப்பாக இருப்போம்!

ஒளித்து வைக்கப்பட்ட ஒளிஒலிப் படக்கருவியில்
பதிவாகிய எத்தனையோ ஒளிஒலிப் படங்கள்
வலை ஊடகங்களில் உலா வந்து - பலர்
உள்ளம் நொந்து அழுவதைப் பாரும்!
இன்றெல்லாம்
வலை ஊடகங்களில் உலா வந்த - பல
ஒளிஒலிப் படங்கள் விளைவித்த
அறுவடையால் சாவடையச் சென்றோரை
எவராவது எண்ணிப் பார்த்தீர்களா?
இனியெல்லாம்
நாம் எல்லோரும் எண்ணிப் பார்த்து
ஒளித்து வைக்கப்பட்ட ஒளிஒலிப் படக்கருவிகளால்
பெண்களின் கோலங்களைச் சிக்கவிடாமல்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக
தமிழர் பண்பாட்டைப் பேணி வெல்வோம்!


13 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். எனது தளத்திற்கு வருகை தந்து, சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. வளரும் விஞ்ஞானம் வீழ்ச்சிக்கு வழி கோலுகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். எனது தளத்திற்கு வருகை தந்து, சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. ஆம். கவனமாக இருக்க வேண்டும். இந்த விடீயோ நான் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். எனது தளத்திற்கு வருகை தந்து, சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். எனது தளத்திற்கு வருகை தந்து, சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். எனது தளத்திற்கு வருகை தந்து, சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிக மிக அருமையான பகிர்வு..விழிப்புணர்வுப் பகிர்வு...மிக்க நன்றி சகோ. விஞ்ஞான வளர்ச்சி வீழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். எனது தளத்திற்கு வருகை தந்து, சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. தங்கள் கருத்துகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கின்றேன். எனது தளத்திற்கு வருகை தந்து, சிறந்த கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பகிர்வை எல்லோரும் பார்த்தால் நலம்தான் நன்று

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!