Translate Tamil to any languages.

வெள்ளி, 29 ஜூலை, 2016

படிக்கப் படிக்க


படிக்கப் படிக்கப் படிப்பும் சுவைக்குமே
அடிக்கடி அதைமீட்டுப் படிக்க இனிக்குமே
                            (படிக்க)

கொடுக்கவும் வேண்டவும் கணக்கும் வேண்டுமே
கொடுக்கக் கொடுக்கக் கூட்டலும் பெருக்கலுமே
வேண்ட வேண்டக் கழித்தலும் பிரித்தலுமே
கணிக்கக் கணிக்கக் கணக்கும் இனிக்குமே
                            (படிக்க)

பழகப் பழகப் படமும் வரைவோமே
கட்டிக் கட்டிக் கட்டுரையும் எழுதுவோமே
எழுத எழுதக் கதையும் புனைவோமே
எண்ண எண்ணக் கவிதையும் ஆக்குவோமே
                            (படிக்க)

இளைக்க இளைக்க விளையாடவும் இயலுமே
உதைக்க உதைக்க ஆடவும் தோன்றுமே
இசைக்க இசைக்கப் பாடவும் வருமே
ஆடியோ பாடியோ நடிக்கவும் முடியுமே
                            (படிக்க)

                இப்பதிவிற்கான முழுமையான விளக்கம் உண்டு. அதைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

5 கருத்துகள் :

  1. காணொளியின் படத்தொகுப்பு அருமை. இணைப்புக்கு செல்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. இப்போதெல்லாம் உங்கள் வலைத்தளத்தில் புதிது புதிதாய் புதுமைகள் செய்யத் தொடங்கி விட்டீர்கள் எனறே நினைக்கின்றேன். வீடியோவை ரசித்தேன். அடுத்தமுறை வீடியோ படம் எடுக்கும்போது, காமிராவை சரியான கோணத்தில் வைக்கவும். முடிந்தவரை செல்ஃபியைத் தவிர்த்து விடுங்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பார்க்க பார்க்க..அருமை தோன்றுமே....

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!