படித்தவர் நகரிலே
எழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே
பொத்தகக் கடைகளிலே
செய்தித்தாள்கள்
நுழைவாயிலில் தூக்கில் தொங்கின...
அவ்வழியே
ஒரு கடையில் நுழைந்தேன்...
உள்ளே பல பொத்தகங்கள்
தூக்கில் தொங்கின...
"ஏன்
இவையெல்லாம்
தூக்கில் தொங்குகின்றன..." என்று
கடை உரிமையாளரிடம் கேட்டேன்...
"எவராவது
இவற்றை வேண்டுவார்களே
என்று தான்" என்றார்...
"வருவாய் நிறையக் கிட்டுதா?" என்றேன்...
"வாசிப்போர் எவருமின்மையால்
சோர்வு தான் நிறையக் கிட்டுகிறதே!" என்று
பதிலளித்த உரிமையாளர் முன்னே
"படித்தவர் நகரிலே
எழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே
எவருக்குமே வாசிக்கவே தெரியாதா?" என்று
நானோ
தலைச் சுற்றி விழுந்துவிட்டேன்!
வாசிப்பு
மனித அறிவைப் பெருக்கும் செயலே...
வாசிப்புப் பசிக்கு
பொத்தகங்களும் செய்தித்தாள்களுமே...
பள்ளிகளில் - இதெல்லாம்
ஒழுங்காகச் சொல்லிக் கொடுத்தால் தானே
பொத்தகக் கடைகளிலே வணிகம் நடக்கும்!
பொத்தகங்களையும் செய்தித்தாள்களையும்
வேண்டிச் சேர்த்தால்
நாலு பணம் வைப்பிலிட(சேமிக்க)
வாய்ப்பில்லையென
பெற்றதுகள் வேண்டிக் கொடுக்கவில்லையோ?
இந்தக் காலப் பிள்ளைகள்
இணையத்தில் படம் பார்க்கையிலே
வாசிப்பை மறந்து போயிட்டுதுகளோ?
யானை விலை ஒட்டக விலையென
அரசு
படிப்புப் பொருட்களுக்கு விலை ஏற்றியதாலோ?
இன்னும் நிறைய
எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளதால்
என்னால்
"எவருக்கும் வாசிக்கவே தெரியாதா?" என்ற
பாவை(கவிதையை) புனைய இயலாமல்
இப்படியே நிறுத்திக் கொள்கின்றேன்!
Translate Tamil to any languages. |
வெள்ளி, 7 நவம்பர், 2014
எவருக்கும் வாசிக்கவே தெரியாதா?
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
இணையத்தின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவற்றுள் "புத்தகம் படிக்கும் பழக்கமும்" ஒன்று என்பதை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
அருமையான பதிவு நண்பரே,,, எமது மதுரை விழா காண வருக...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நடப்பை நன்றாக உணர்த்துகிறது ...கவிதை
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
"படித்தவர் நகரிலே
பதிலளிநீக்குஎழுத்தூர் ஊரிலே
நம்மாளுகள் தெருவிலே................உண்மையைத்தான் உரைத்தீர்கள் அய்யா...!!!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
கவிதை அருமை ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
நாட்டு நிலைமையை உணர்த்தும் வகையில், வேதனையாக உள்ளது.
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வாசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது ,இல்லை என்றால் புத்தகக் கடைகள் இல்லாமல் போயிருக்க வேண்டுமே !
பதிலளிநீக்குவாசிப்பவர் எண்ணிக்கை, குறைந்து வருவதை நினைவூட்டினேன்.
நீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
இது போல முகநூலிலும்
பதிலளிநீக்குஅங்கவீன மொழி ஆளுமைக் கவிதை வரிகளுக்கு
ஆகா ஓகோ என்று கருத்துகளும் விழுகிறது.
மக்ளுக்கு விழிப்புணர்வு தேவையோ என்று சிந்தனையும் வராமலில்லை.
எழுதுங்கள் எழுதுங்கள் என்று திருந்துவர்!!!
Vetha.Langathilakam
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
உண்மைதான். இணையம் புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை ஆட்கொண்டுவிட்டது! என்றாலும் இணையத்திலும் நல்ல நல்ல விடயங்களும், புத்தகங்களும் கிடைக்கின்றனவே! ஆனாலும் இணைய்ம் என்பதில் பொழுது போக்கு அம்சமான சமூக வலைத்தளங்களில் சிக்கிக் கிடப்பதால் வாசிப்பு குறைந்ததோ?!!! ம்ம்ம் நல்ல கவிதை!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.