பாவலராவது என்பது
பிறக்கும் போதே வந்ததல்ல
எமது முயற்சியின் விளைவாய் மலர்ந்ததே!
அன்று பத்திரிகை, மூ.மேத்தாவின் நூல்கள்
இன்று வலைப்பூக்கள் என்றெல்லாம் படித்தே
எவராச்சும் எழுதிய பா/ கவிதை போல
பாப்புனைய முயற்சி செய்கிறேன் - எனக்கும்
பாவலராக விருப்பம் (ஆசை) இருப்பதால் தான்!
பிறப்பிலேயே பாவலர்/ கவிஞர் உருவானாரா
பிறந்த பின் வாழும் வேளை
பாவலர்/ கவிஞர் உருவாக்கப்பட்டாரா
என்றெல்லாம் அரங்குகள் தோறும்
பட்டிமன்றங்கள் நிகழ்ந்தாலும்
பாவலர்/ கவிஞர் பிறக்கவில்லை
சூழலால் உருவாக்கப்படுகின்றார் என்றே
என் உள்ளத்தில் மலர்ந்த முடிவு!
பாப்புனைய விரும்பும் உறவுகளே
எனது எண்ணங்களைப் பார்த்து
பாப்புனையும் திறனைப் பெருக்கியிருந்தாலும்
தீபாவளி (2014) நாளை முன்னிட்டு நடாத்திய
பாப்புனையும் திறன்காண் போட்டியில்
பங்கெடுத்த எல்லோருக்கும் வாழ்த்துகள்!
எண்ணங்களை வெளிப்படுத்தும் பா/ கவிதை
கண்ணால் படம் பார்த்ததும் - உங்கள்
உள்ளத்தில் தோன்றிய பா/ கவிதை என
இரண்டு பா/ கவிதை புனைந்த - உங்களுக்கு
பாப்புனைதலில் பட்டறிவு கிட்டியிருக்குமே!
போட்டிகளில் வெற்றி பெறமுன்
போட்டிகளில் பங்கெடுத்த முயற்சியே
பாவலராகக் கிடைத்த வெற்றி என்பேன்!
போட்டிகளில் பங்கெடுத்தவருக்குக் கொண்டாட்டம்
வெற்றியாளரைத் தெரிவு செய்வதில்
நடுவர்களுக்குத் தான் திண்டாட்டம் என்பேன்!
நண்பர் ரூபன் சுட்டிக் காட்டியது போல
ஐம்பத்திநான்கு பாப்புனையும் ஆற்றலாளர்களிடையே
பத்துப் பாப்புனையும் திறனாளர்களை
பாப்புனையும் நுட்பங்களை வைத்தே
நடுவர்களும் தெரிவு செய்திருப்பர் என்பேன்!
ஏனெனில்
போட்டியில் பங்கெடுத்த எல்லோருமே
பாப்புனைதலில் வென்றவர்களே என்பேன்!!
எப்படியிருப்பினும்
பாப்புனைந்து போட்டியில் வென்ற
பத்துப் பேரையும் வாழ்த்துங்கள் - அந்த
பத்துப் பேரினது பாக்கள் - நாம்
கற்றுக்கொள்ள வழிகாட்டும் என்பேன்!
பத்துப் பேரினது இருபது பாக்களைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்,,,
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html
பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!
Translate Tamil to any languages. |
திங்கள், 17 நவம்பர், 2014
பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!
லேபிள்கள்:
5-பாக்கள் பற்றிய தகவல்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஅருமையாக நல்ல கவியில் கூறினீர்கள்!
பாப்புனைந்து பரிசில் பெற்றவள் எனும் வகையில்
என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும்
என் அன்பு நன்றியை இங்கு கூறுகின்றேன்!
மேலும், என்னோடு போட்டியில் கவிப்பயணம் செய்தவர்களுக்கும்
பரிசில்களைப் பெற்ற அனைவருக்கும்
உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான் என்பதில் விவாதமே தேவையில்லை !அனைவருக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
வாழ்த்திய பா வரிகள் எல்லம்மிக அருமையாக உள்ளது.. தங்களின் ஒத்துழைப்பு எனக்கு கிடைத்த பாக்கியம் என்றுதான் சொல்ல முடியும் .. கவிப்போட்டியில் வெற்றி மகுடம் சூட்டிய அனைவருக்கும் பங்கு பற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
இது போன்ற போட்டிகளை நடத்தும் தங்கட்கும் திரு ரூபன் அவர்களுக்கும்,
பதிலளிநீக்குஉற்சாகமாகப் போட்டிகளில் கலந்து கொண்ட கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!
அங்கும் சொல்லியிருக்கிறோம்.
நன்றி
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.