வரவும் செலவும்
வருவாய்க் கணக்கில்
நட்பும் பிரிவும்
உறவுக் கணக்கில்
நல்லதும் கெட்டதும்
அறிவுக் கணக்கில்
தன்நலமும் பிறர்நலமும்
உணர்வுக் கணக்கில்
காதலும் தோல்வியும்
இளமைக் கணக்கில்
மகிழ்வும் துயரும்
வாழ்க்கைக் கணக்கில்
ஆயினும்
பிறப்பும் இறப்பும்
ஆண்டவன் கணக்கில்...
எத்தனை கணக்கில்
எத்தனையைச் சேர்த்தாலும்
இறுதியில் எம்மை
இறைவன் - தன்
கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே!
Translate Tamil to any languages. |
புதன், 5 நவம்பர், 2014
ஆண்டவன் கணக்கில்...
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
எத்தனையைச் சேர்த்தாலும்
பதிலளிநீக்குஇறுதியில் எம்மை
இறைவன் - தன்
கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே! //
உண்மை தான் ஐயா. நன்றி
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
ஆயினும்
பதிலளிநீக்குபிறப்பும் இறப்பும்..இயற்கையின் கணக்கில் என்று எனக்கு தோன்றுகிறது..அய்யா..!!
பிறப்பும் இறப்பும்...
நீக்குஇயற்கையின் கணக்கில் என்று
எனக்கு தோன்றுகிறது என்கிறீர்கள் - அந்த
இயற்கையைப் படைத்தவரும்
ஆண்டவரே / கடவுளே!
கடவுளை படைத்தது மனிதனா....? மனிதனை படைத்தது கடவளா...? என்ற முடிவில்லா விவாதம் வரும்..திரு. யாழ் அவர்களே!!!
பதிலளிநீக்குகடவுளைப் படைத்தது மனிதனா....? மனிதனைப் படைத்தது கடவளா...? என்ற முடிவில்லாக் கருத்துமோதல் தொடருவதை நானறிவேன்.
நீக்குமுடிவு...?
ஆண்டவன் கணக்கில்...
பதிலளிநீக்குஎத்தனை கணக்கில்
எத்தனையைச் சேர்த்தாலும்
இறுதியில் எம்மை
இறைவன் - தன்
கணக்கில் சேர்த்துக்கொள்கிறானே!//
அதுதானே யதார்த்தம்! நண்பரே!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.