பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின்
"இளைய கவிஞர்கள் கவனிக்க" என்ற பதிவில்
"மரபு கவிதை எழுதுவதில்
மொழி ஆளுமை நிறைய வேண்டும்.
இலக்கணத்துக்காக வார்த்தைகளைத் தேடி எழுதுவதில்
தேவை இல்லாத வார்த்தைகள் இடம் பிடித்து
கவிதையின் அழகு கெடுவதைப் பார்க்கிறேன்." என்று
தன் எண்ணத்தைப் பகிர்ந்த
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
கருத்தைப் (Comments) படித்த வேளை - அவரது
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவின் இணைப்பு - அதில்
இருக்கக்கண்டு சொடுக்கிப் படித்தேன் - அதில்
பாப்புனைய விரும்புவோருக்குப் பயன்தரும்
அசை, சீர், தளைக்கான சுருக்குவழி இருப்பதாக
எண்ணியதன் விளைவு தான் - அவரது
பதிவைப் பகிர விரும்ப வைத்ததே!
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் தொடரில்
(1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12)
நான் பா நடையில் பதிவு செய்த
எழுத்து, அசை, சீர் பற்றிப் படித்தவர்களுக்கு - அதனை
நினைவூட்டிக்கொள்ள உதவுமென நம்பியே
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படி
அசை, சீர், தளைக்கான சுருக்குவழிகளை அறி என்று
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! - நான்
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் தொடரின்
எஞ்சிய பகுதிகளை விரைவில் தர
முயற்சி செய்துகொண்டு தானிருக்கிறேன்!
"எழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா?
எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா?
தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா?
எண்ணியதும் எழுதநாம் காளமேகப் புலவரா?
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!" " என்று
எனது முன்னைய பதிவில் எழுதியதை
கொஞ்சம் மீட்டுப் பாருங்களேன்...
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!" என்றால்
பாப்புனையும் ஆற்றல் இருந்தால் தான்
பாவும் உள்ளத்தில் கருவுறும் என்பேன்!
எடுப்பாக, மிடுக்காகச் செல்ல
ஆணென்றால் பட்டுவேட்டி
பெண்ணென்றால் பட்டுச்சேலை
மணிக்கணக்காக இருந்து உடுத்தினாலும்
உடுக்க ஓர் ஒழுங்கு இருப்பது போல
உள்ளத்தில் உரசிய உண்மையைக் கூட
வெளிப்படுத்த உதவும் ஓர் ஒழுங்கு தான்
பாப்புனையும் ஆற்றல் என்பேன்! - அந்த
ஆற்றலை வளர்த்துக் கொள்ள
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்!
யாப்பறிந்து பாப்புனையும் வேளை
நேரசை, நிரையசை அறிந்து சீராக்கி
சீராக்கும் வேளை அசைபிரித்து அடியாக்கி
அடியாக்கும் வேளை தளையறிந்து தொடையாக்கி
தொடையறிந்து பாவாக்கிச் செல்லும் வேளை
அசை, சீர், தளைக்கான சுருக்குவழி உதவுமே! - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படியுங்களேன்!
http://gmbat1649.blogspot.in/2011/08/blog-post_29.html
படிக்கிறேன் சகோ மிக்க நன்றி !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குமிக அருமை! பகிர்விற்கு நன்றி!
பார்த்துப் படித்துப் பயனடைகிறேன்!
வாழ்த்துக்கள்!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
நானும் படிக்கிறேன்.நன்றி ஐயா.!
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
ஐயா வணக்கம். தமிழே இன்னும் சரியாகக் கற்கவில்லை, அறிஞர் பாலசுப்பிரமணியம் என்று கூறப்படுவதற்கு தகுதி இல்லாதவன். மேற்படி “கவிதை கற்கிறேன் என்னும் பதிவு ஒரு கற்கும் ஆர்வத்தில் எழுதியது. அதில் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் யாருக்காவது உதவுமானால் மகிழ்ச்சி நிச்சயம் எனக்கு. நான் இப்போதெல்லாம் மனசில் தோன்றியவாறு எழுதுகிறேன் கவிதை என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில்லை. இருந்தும் அவை ரசிக்கப் படுகின்றன. என் எழுத்தும் வாசகர்களுக்குப் போய்ச் சேருகிறது. சுட்டியைப் பதிவில் பகிர்ந்ததற்கு நன்றி. .
பதிலளிநீக்குவலையுலகில் நல்ல பதிவுகளைத் தேடும் வாசகர்களுக்கு, என் கண்ணில் பட்ட நல்ல பதிவுகளை அறிமுகம் செய்கிறேன். அந்த வகையில் தங்கள் பதிவும் பலருக்குப் பயன்தரும் பதிவு என்றுணர்ந்தே எனது வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன்.
நீக்குமிக்க நன்றி.
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
பதிலளிநீக்கு"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படியுங்களேன்!
--- தங்களின் பகிர்வுக்கு நன்றிகள்! பல!!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
படித்துப் பயன் பெறுகிறேன்.நன்றி
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.
தங்களின் பகிர்வு கண்டேன்.
பதிலளிநீக்குபடித்தேன்.
அருமையான மரபிலக்கண வகுப்பில் அமர்ந்திருந்த உணர்வை அடைந்தேன்.
யாழ்ப்பாவாணரே!
பகிர்விற்கு நன்றி!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.