Translate Tamil to any languages.

புதன், 30 ஏப்ரல், 2014

"கவிதை" என்பது வடமொழியா?

"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!

சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.

இப்பதிவின் தொடர் பதிவைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?
http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html

8 கருத்துகள் :

  1. நீங்கள் சொல்வது சரிதான் .எனக்கும் இப்போதுதான் புலவர் சொல்லித் தெரிந்தது.பா என்பதுதான் சரி .புலவர்,பாவலர் என்று அதனால் தான் தமிழ் அறிஞர்கள் சொல்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பாவலன் பாடல்கள் புனைவதில் வல்லவன் கவிஞன் கவிதைகள்
    தொடுப்பதில் வல்லவன் பா வேந்தன் ,கவியரசன் பாடல் ,கவிதை
    இரண்டும் இரு வேறு திசைகளா !ஆதலால் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட
    வேண்டிய உவமைப் பெயர்களா ?..சிந்தியுங்கள் தங்கள் கருத்தினையே
    நானும் வரவேற்கின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு வேறு திசைகளுமல்ல, இரு வேறு வெளியீடுமல்ல
      இவை தமிழ் சொல்லெனச் சுட்டவே முன்வருகிறேன்.

      சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.

      நீக்கு

  3. வணக்கம்!

    கவி - கவிஞன் என்ற இரண்டு சொற்களும் வடமொழியே
    அதற்கான தமிழ்
    கவி - பா, பாட்டு, பாடல், செய்யுள்
    கவிஞன் - பாவலன்

    கவிஞன் கவிதை இரண்டும் அயற்சொல்
    புவியும் அதுவெனப் போ!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவி - கவிஞன் ஆகிய இரண்டும் தமிழே!

      சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.

      நீக்கு
  4. நல்லது சகோ ! இவற்றை புரியவைத்தமைக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ....! கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தான் தெளிவு படுத்தி விட்டாரே அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004." என்ற சான்றின் அடிப்படையிலேயே எனது பதிவை இட்டிருக்கிறேன்.

      கவிஞா் கி.பாரதிதாசன் ஐயாவின் கருத்தை வரவேற்கிறேன்.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!