எடுத்துக்காட்டு:
தாய்மை தான்
உண்மைக்குச் சான்று!
இல்லான், இல்லாள் இணைந்து நாடாத்திய குடும்ப வாழ்விற்கான சான்றாகத் தாய்மையைப் போற்றுகிறோம். அதாவது, தாய்மை இவ்வுண்மையை வெளிப்படுத்துவதால் உண்மைக்குச் சான்று தாய்மை எனலாம். இந்தப் பெருங்கதையைச் சுருங்கச் சொல்வதாக மேற்காணும் ஈரடிப் பாவைக் (கவிதையைக்) கூறலாம்.
"முட்டாள் நாளைப் பற்றிப் பா(கவிதை) புனைவீரா?" என்ற கேள்வியைப் பா(கவிதை) புனைய முனைவோர் விருப்புடன் ஏற்று இறங்குங்கள். பா(கவிதை) புனைய இறங்கு முன் முட்டாள் நாளைப் பற்றிப் படித்தோ அல்லது பார்த்தோ அல்லது பிறரிடம் கேட்டறிந்தோ இருக்க வேண்டும். சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளையே முட்டாள் நாள் என்று கூறுவதை நாம் அறிவோம். அப்படியாயின்,
"சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளே
முட்டாள் நாள்!" என்று
உங்கள் பா(கவிதை) இற்கான முதலாம் அடியைத் தொடங்குங்கள். அடுத்த அடியைத் தொடங்க முன் முட்டாள் நாளைப் பற்றி http://ta.wikipedia.org/s/1a1o என்ற தளத்தில் படியுங்கள். அதிலே முட்டாள் நாளை முதலில் பிரெஞ்சு நாட்டவர் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின்,
"முட்டாள் நாள்
பிரெஞ்சு நாட்டிலே பிறந்தது!" என்று
உங்கள் பா(கவிதை) இற்கான இரண்டாம் அடியைத் தொடங்குங்கள். மேலும், http://ta.wikipedia.org/s/1a1o என்ற தளத்தில் 1466 ஆம் ஆண்டு தான் 'விகடகவி' என்ற ஒருவரால் மன்னன் பிலிப்பை அரச சபையில் வைத்து முட்டாளாக்கியதாகவும் அந்நாளையே முட்டாள் நாளாகக் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின்,
"1466 இலே
மன்னன் பிலிப்பை
அரச சபையிலே
'விகடகவி' என்றவர்
முட்டாளாக்கிய நாளே
முட்டாள் நாளாம்!" என்று
உங்கள் பா(கவிதை) இற்கான மூன்றாம் அடியைத் தொடங்குங்கள். அதேவேளை, எவரும் முட்டாளாகப் பிறந்திருக்க மாட்டார்களென நாமறிவோம். அப்படியாயின்,
"பிறக்கும் போது
எவரும்
முட்டாளாகப் பிறப்பதில்லையே!" என்று
உங்கள் பா(கவிதை) இற்கான நான்காம் அடியைத் தொடங்குங்கள். ஆயினும், ஒரு பாவலன் (கவிஞன்) நடப்பைக் கூறி நாளையை விளக்கி வழிகாட்டத் தவறக்கூடாது. அப்படியாயின்,
"எமக்கு
இங்கு முட்டாள் நாளா?
நாம் படிப்போம்...
அறிவாளி நாளாக
முட்டாள் நாளையே மாற்றுவோம்! என்று
உங்கள் பா(கவிதை) இற்கான ஈற்று அடியை முடித்து வைக்கலாம். இவ்வாறு நாம் கட்டம் கட்டமாக எண்ணி அடிகளை ஆக்கிய பின், எல்லா அடிகளையும் தொகுத்து ஒரு பா(கவிதை) ஆக்கலாமே! அவ்வாறே நான் ஆக்கிய பாவைக் (கவிதையைக்) கீழே பார்க்கவும்.
இத்தரைக்குச் சித்திரை (ஏப்பிரல்) வர
முதல் நாள் முட்டாள் நாள் என
முதல்ல பிரெஞ்சுக்காரர்
வெளிப்படுத்தினாலும்
1466 ஆம் ஆண்டு
அரச சபையில் வைத்து
பந்தயம் ஒன்றிலே
மன்னன் பிலிப்பை முட்டாளாக்கிய
'விகடகவி' என்ற பாவலரின் வெற்றி நாளா
முட்டாள் நாள்!
(தகவல்: http://ta.wikipedia.org/s/1a1o)
எண்ணிப் பாரும்
மண்ணில் பிறக்கையிலே
எவரும்
முட்டாள்கள் இல்லையென்றால்
முட்டாள் நாள் நமக்கெதற்கு?
சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளை
இத்தரையில் நாம்
அறிவாளி நாளாக மாற்றி
எல்லோரையும்
அறிஞர்களாக ஆக்குவோமே!
மேலே நீங்கள் படித்தது நான் தான் சின்னப் பொடியன் யாழ்பாவாணன் எழுதிய பா(கவிதை) தான். அதென்ன இடையில "(தகவல்: http://ta.wikipedia.org/s/1a1o)" என்று எழுதியிருப்பதாக நீங்கள் கேட்கலாம். குறித்த தளத்தில் தானே குறித்த தகவைலப் பொறுக்கியதாக மேலே குறிப்பிட்டேன். அவ்வாறு எழுதாவிடின் படித்தவர்கள் என்னை "அறிவுப் பொறுக்கி" என்பதற்குப் பதிலாக "இலக்கியத் திருடன்" என்பார்களே!
பா(கவிதை) புனைய விரும்பும் எல்லோரும் பா(கவிதை) புனையலாம். மேலே நான் பா(கவிதை) புனைய எப்படி எண்ணமிட்டேன்; எப்படித் தகவல் பொறுக்கிப் பொறுக்கிய இடத்தையும் சுட்டினேன் என்பதையும் மறக்கவேண்டாம். அதாவது சொந்த எண்ணங்களையே வெளிப்படுத்த வேண்டும்; பிறரது எண்ணங்களைப் பொறுக்கிப் பாவித்திருப்பின் அவரது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்படி எழுதுவோரையே இலக்கிய நேர்மையுடன் எழுதுவோர் என்று கூறலாம். சரி, இனி நீங்கள் நல்ல நல்ல பா(கவிதை)களை எழுதுங்களேன்.
முட்டாள் நாளை இப்படியும் புத்திசாலித் தனமாய் கொண்டாடியதற்கு பாராட்டுக்கள் !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை உளநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
சரியான பதிலடி ! மனத்தைக் கசக்கிப் பிழிந்து நாம்
பதிலளிநீக்குஎழுதும் வரிகளைத் திருடுவதை விட இது எவ்வளவோ
மேல் என்று உணர்த்தியுள்ளீர்கள் .அருமையான பகிர்வுக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .இன்று என் தளத்தில்
மற்றுமொரு பாடல் வரிகள் காத்திருக்கின்றது ஐயா
முடிந்தால் வாருங்கள் .நன்றி .
தங்கள் கருத்தை உளநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
பல இணைப்புகளை படித்துள்ளீர்கள் ஐயா...
பதிலளிநீக்குதங்கள் கருத்தை உளநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
''..பிறரது எண்ணங்களைப் பொறுக்கிப் பாவித்திருப்பின் அவரது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்படி எழுதுவோரையே இலக்கிய நேர்மையுடன் எழுதுவோர் என்று கூறலாம்...''
பதிலளிநீக்குgood.
Vetha.Elangathilakam
தங்கள் கருத்தை உளநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
>> இத்தரையில் நாம்
பதிலளிநீக்குஅறிவாளி நாளாக மாற்றி
எல்லோரையும்<<
கிருஷ்ண தேவ ராயரை தெனாலி ராமன் முட்டாளாக்கிய கதைகள் நம் நாட்டில் ஏராளம். தெனாலி ராமன் பிறந்தநாளை (கண்டு பிடித்து) அதை அறிவாளிகள் நாளெனக் கொண்டாடலாமே!
நம் தமிழறிவையும், தர்க்க அறிவையும் தீட்டிக் கொள்ள: முத்துவின் புதிர்கள் (http://muthuputhir.blogspot.com/)
தங்கள் கருத்தை உளநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
தங்கள் நேர்மையும் முட்டாள்கள் பற்றிய விளக்கிய பாவும் சிறப்பே வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குகட்டுரை போட்டியில் வெற்றி பெற்றமைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!
தங்கள் கருத்தை உளநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.
வணக்கம் நண்பர்களே
பதிலளிநீக்குஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
தங்கள் கருத்தை உளநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
நீக்குமிக்க நன்றி.