Translate Tamil to any languages.

ஞாயிறு, 1 மார்ச், 2020

நாம் ஏன் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தைப் பயன்படுத்த வேண்டும்?


இன்றைய முதற் கேள்வி இது தான்.
வலைப்பூக்கள் (Blogs), வலைப்பக்கங்கள் (Webs), கருத்துக்களங்கள் (Forums) எனப் பல இருக்கு. முகநூல் (Facebook), கீச்சகம் (Twitter) போன்ற சமூக வலைத்தளங்கள் பல இருக்கு. அப்படி இருக்கையில்  விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் எதற்கு? மொழி, இலக்கியம், தொழில் நுட்பம், அறிவியல் எனப் பல துறை சார் அறிவினைப் பேணுகின்ற வேளை, 300 இற்கு மேற்பட்ட மொழிகளில் இயங்கும் ஒரே கலைக்களஞ்சியமாக இருப்பதோடு கட்டற்ற இலவசத் தளமாக இருப்பதும் சிறப்புத் தானே ஆகையால் பலருக்குப் பயன்தரும் ஒரே கலைக்களஞ்சியமாக அது மின்னுகிறது. கூகிள் தேடற்பொறியில் தகவல் ஒன்றைத் தேடும் வேளை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் இருப்பதே முதலில் வரும்.


எனவே, மாணவர்களின் அறிவுத்தேடலுக்கு விக்கிப்பீடியா கலைக்களஞ்சியமே சிறந்து. அதேவேளை தமக்குத் தெரிந்த அறிவினை ஏனைய மாணவர்களும் பெற்றுக்கொள்ள வசதியாக ஒவ்வொரு மாணவரும் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தங்கள் பதிவுகளைப் பதிவேற்றுவதே சிறப்பு. பள்ளி மாணவர்களைத் தவிர ஏனையோரும் தமது அறிவைப் பெருக்கிக் கொள்ள விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் உதவுகிறதே! ஆகையால், அறிஞர்கள் எல்லோரும் தமது அறிவினை ஏனையோரும் பயனீட்டும் வண்ணம் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தங்கள் பதிவுகளைப் பதிவேற்றி உதவலாம். அதேவேளை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் பங்களிப்புச் செய்வதால் தமிழ் மொழி வளம் பேணுவதோடு மாற்றாருக்கு அறிவினை ஊட்டும் பணியையும் செய்வதாக இருக்கும்.




விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்திற்குப் பங்களிப்பளிப்புச் செய்வதால் மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் எல்லோரும் தமது அறிவாற்றலை பெருக்குவதாடு உலகில் பலர் அறிவாற்றலை பெருக்க உதவுவதாகவும் அமையும். எனவே, எல்லோரும் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தம்மை இணைத்து நற்பணியாற்ற முன்வருமாறு அழைக்கின்றேன். இதனால் தங்களது வலைப்பக்க வெளியீடுகள் எதுவும் செயலற்றுப் போகாது. விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் பதிவிட்டதைத் தங்களது வலைப்பக்கங்களிலும் வெளியிடலாம். முடிவாக அறிவினைப் பகிரும் பொது அறிவுக் களஞ்சியமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் பங்களிப்புச் செய்வதால் தமிழ் மொழி வளம் பேணுவதோடு தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் ஆவணப்படுத்த முடியும். இப்பணியை மேற்கொள்ள எல்லோரும் ஒன்றுபடுவோம்.



எப்படியாயினும் https://ta.wikipedia.org/ தளத்தில் நுழைந்து பாருங்கள். அத்தளத்தில் உறுப்பினராகுங்கள். பதிவுகளுக்கான எழுத்து நடை (கைவண்ணம்) எப்படி இருக்கென்பதைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். "உலகம் எங்கும் தமிழர் வாழ்ந்தனர்." என்ற பதிவினை அல்லது "உலகம் எங்கும் தமிழ் ஆட்சி செய்தது." என்ற பதிவினை விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் இணைக்க நீங்கள் விரும்பி இருக்கலாம். ஆயினும் குறித்த தலைப்பினை உறுதிப்படுத்தக்கூடிய சான்றுகளை முன்வைத்தே இணைக்கலாம். "சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி?" என்ற பதிவினை https://ta.wikipedia.org/s/5yb என்ற இணைப்பினைச் சொடுக்கிக் கற்றுக்கொண்டு முன்னேற எனது வாழ்த்துகள்.

7 கருத்துகள் :

  1. சிறப்பான பகிர்வு. தமிழ் விக்கிப்பீடியாவில் சுமார் 1000 கட்டுரைகளை எழுதியுள்ளேன். உங்களைப் போன்றோர் கொடுக்கும் ஊக்கம் என்னை தமிழ் விக்கிப்பீடியாவில் மென்மேலும் எழுத வைக்கிறது. நன்றி. விக்கிப்பீடியாவில் எழுத நண்பர்களை உங்களுடன் சேர்ந்து நானும் அழைக்கிறேன்.
    தமிழர் அல்லாதோர்/தமிழ் மொழி அறியாதவர்கள் நம் பெருமையினைத் தெரிந்துகொள்ள ஆங்கில விக்கிப்பீடியாவில் சுமார் 150 கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் விக்கிப்பீடியாவில் சுமார் 1000 கட்டுரைகள் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாவில் சுமார் 150 கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள் என்பது மலைப்பாக இருக்கிறது ... உங்கள் பணி சிறப்பானது !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

      நீக்கு
  2. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!