உலகத் தமிழ் வலைப்பதிவர்களுள்
என் உள்ளம் தொட்ட அறிஞரே!
என் உள்ளத்தில் - நீங்கள்
என்றும் எனக்கு வழிகாட்டியே!
படைப்பில் தகுதி
தெரியுமே!
ஊக்குவிக்கப் பொன்னாடை, பட்டம், விருதென்று
ஊக்கமளித் தோர்சிறியோர் தானறியார் - ஊக்கம்
அளித்தார் சிலருக்கு, பெற்றவரும் சின்னாள்
அளிக்கார் சிறந்த படைப்பு!
மக்களாய/ குமுகாய வலைத்தளங்களில் இலக்கியக் குழுக்கள் படைப்பாளிகளை ஊக்குவிப்பது சிறப்பு. ஆனால், சிறந்த படைப்பாளிகளுக்கு மதிப்பளிப்புக் கிடைக்காமல் போவதையும் காணமுடிகிறது. அதற்கு, நடுவர்கள் சரியில்லை என்ற பேச்சும் உண்டு. அப்படியொரு சூழலில் இப்படியொரு இரு விகற்ப நேரிசை வெண்பா. இது எவரையும் நோகடிக்கப் புனையவில்லை. எல்லோரும் சிறந்த படைப்புகளை உருவாக்குவோம்.
பொன்னாடை, விருதுகள்,
பட்டங்கள்
மக்களாய/ குமுகாய வலைத்தளங்களில் மின்னும் குழுக்கள் வழங்கியதாகப்
பலர் பொன்னாடை, விருதுகள், பட்டங்கள் பெற்றிருந்தாலும் இலக்கணப் பாக்கள் புனைவோர் அரிதாகவே
மின்னுகின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு நான் புனைந்த பாக்கள் இவை (இரு விகற்ப நேரிசை
வெண்பா). நீங்களும் இப்படி முயன்று பார்க்கலாம்.
பொன்னாடை தான்அணிவித் தும்மதித்தால் பாவலரா?
என்நாளும் புத்தம்பு துப்பாதான் - மின்னத்தான்
நீபுனைந்தா லும்பாவ லர்ஆகத் தானுயர
நீபுனைவீ ராமரபுப் பா?
விருதுகள் பெற்றதால் பாவலர் என்றால்
விருதுகளா பாப்புனைய வைக்கும் - விருதுகள்
பாப்புனையத் தூண்டினாலும் பாவலராய்த் தானுயர
பாப்புனைவீ ராமரபில் தான்?
பட்டங்கள் தான்பலவாம் பாக்கள்தான் கொஞ்சமாம்
பட்டங்கள் தான்குழுக்கள் நீட்டியதாம் - பட்டங்கள்
தான்அடுக்கித் தம்பெயரும் இட்டுத்தான் பாப்புனைந்தும்
தான்மரபில் பாப்புனையா ரே!
திரு.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நினைவஞ்சலிகள்
பதிலளிநீக்குகவிதை நன்று
மறக்க இயலாத மனிதர்
பதிலளிநீக்கு